திருச்சி மாவட்டத்தில் வெற்றி வாகை சூடிய 22 வயது இளம் சுயச்சை பெண் வேட்பாளர்!

0
200

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இதில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் தமிழ்நாடு முழுவதும் சுமார் 268 மையங்களில் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டனர்.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. அதன் பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், தற்சமயம் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் மற்றும் முன்னிலை நிலவரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்த சூழ்நிலையில், திருச்சி மாவட்டம் துவாக்குடி நகராட்சி 5வது வார்டில் போட்டியிட்டு 22 வயது இளம் பெண் வேட்பாளர் சினேகா 494 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். அதோடு பொறியியல் பட்டதாரியான இவர் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

Previous articleஅரசியல் கட்சிகளே வெற்றி பெறாத ஒரே பேரூராட்சி! கடும் அதிர்ச்சியில் ஆளும் தரப்பு!
Next articleநீங்க இந்த ராசிக்காரர்களா? இன்று தொட்டது துலங்கும்!