வட கொரிய அதிபர் உடன் தொடர்பில் இருக்கும் அமெரிக்காவின் முன்னாள் அதிபர்! வெளியான புதிய தகவல்!

Photo of author

By Sakthi

அமெரிக்காவில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று அதிபராக செயல்பட்டவர் டொனால்டு ட்ரம்ப் இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் அதிபராக செயல்பட்டார். இவர் அமெரிக்க அதிபராக இருந்தபோது அமெரிக்கா, வட கொரியா இடையே உறவில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. ஆனால் டொனால்ட் ட்ரம்புக்கும், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்குமிடையே தனிப்பட்ட நட்பு நிலவி வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், அதிபர் பதவியிலில்லாத போதும் கூட தற்போது வரையில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடன் டொனால்டு டிரம்ப் தொடர்பிலிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி ஆசிரியரும் சி.என்.என் செய்தி நிறுவனத்தின் அரசியல் ஆர்வலருமான மேகி ஹபிர்மென் இந்த தகவலை தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்பாக கான்பிடண்ட் மேன் தி மேக்கிங் ஆப் டொனால்ட் ட்ரம்ப் அண்ட் பிரேக் ஆப் அமெரிக்கா என்ற தலைப்பில் மேகி புதிதாக புத்தகம் ஒன்றை எழுதியிருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்தப் புத்தகம் இணையதளத்தில் விற்பனைக்கு வந்திருக்கும் சூழ்நிலையில், சி.என்.என் செய்தி நிறுவனத்திற்கு மேகி ஹபிர்மென் வழங்கிய பேட்டியில் முன்னாள் அதிபர் டொனால்டு தான் தற்போதும் வடகொரிய அதிபர் கிம் உன்னுடன் தொடர்பிலிருப்பதாக தன்னுடைய உதவியாளரிடம் கூறியிருக்கிறார். அதாவது கிம் உன்னுடன் மட்டுமே தொடர்பிலிருக்கிறார் என தெரிவித்திருக்கிறார்.

கிம் உன்னுடன் தொடர்பிலிருப்பதாக அவதெரிவித்த கருத்துக்கு ட்ரம்ப் அறிக்கையின் மூலமாக விளக்கம் கொடுத்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் நான் வடகொரிய அதிபருடன் மட்டுமே பேசுவதாகவும், உலக நாடுகளின் மற்ற தலைவர்களுடன் பேசவில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார் அது தவறு என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வடகொரியா அதிபருடன் பேசி வருவதாக அவர் தெரிவித்திருக்கின்ற தகவலுக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.