ஒருவருக்கு நேரம் சரி இல்லை என்றால் அவர் ஒரு காரியத்தை செய்ய முற்படும்பொழுது பல தடைகளையும், பல பிரச்சினைகளையும் தான் எதிர் கொள்வாரே தவிர அந்த காரியம் முடிவடையாது. என்னதான் பலமுறை, பல நாட்கள், பல மாதங்களாக முயற்சி செய்தாலும் கூட ஒரு சில செயல்களை அவர்களால் செய்து முடிக்கவே முடியாது.
என்னதான் முயற்சி செய்தாலும் ஒரு சில செயல்களை செய்து முடிக்கவே முடியவில்லை, அதற்கு என்ன செய்ய வேண்டும்? என யோசிப்பவர்கள் இந்த ஒரு எளிய வழிபாட்டை முழு நம்பிக்கையுடன் முயற்சி செய்து பார்த்தால் கண்டிப்பாக அதற்கான பலன் கிடைக்கும். தொட்ட காரியங்கள் அனைத்தும் துலங்கும்.
பிள்ளையாருக்கு தொடர்ந்து ஐந்து நாட்கள் வழிபாட்டை செய்வதன் மூலம் நமது தடைகள் அனைத்தும் நீங்கும். இந்த வழிபாட்டை தொடங்க வேண்டும் என்றால் ஒவ்வொரு மாதமும் வருகின்ற சங்கடஹர சதுர்த்தி அல்லது ஒவ்வொரு வாரமும் வருகின்ற திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் இந்த வழிபாட்டினை தொடங்கிக் கொள்ளலாம்.
இந்த வழிபாட்டை தொடங்கிய பிறகு வெளியூர் எங்கேனும் செல்லக்கூடாது. அதேபோன்று மிகவும் சுத்தபத்தமாக இருக்க வேண்டும். அசைவம் உண்ணக் கூடாது. இந்த வழிபாட்டினை செய்வதற்கு மஞ்சளில் பிள்ளையார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அந்த மஞ்சள் பிள்ளையார் பிடிக்கும் பொழுது, சிறிதளவு ஜவ்வாது மற்றும் பன்னீர் இது போன்ற வாசனைப் பொருட்களையும் கலந்து பிள்ளையார் பிடித்து கொள்ளலாம்.இந்தப் பிள்ளையாரை வெற்றிலையின் மீது வைத்து, அருகம்புல் மற்றும் பூக்களை பிள்ளையாருக்கு சூட்டிக் கொள்ள வேண்டும்.
நாம் வழிபடக்கூடிய ஐந்து நாட்களுக்கும் இந்த ஒரு பிள்ளையாரையே தொடர்ந்து வைத்துக் கொள்ளலாம். தினமும் பிள்ளையார் பிடிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.
இந்த பிள்ளையாருக்கு ஒரு வாழை இலை அல்லது தட்டில் வைத்து இரண்டு நெய் தீபங்களை ஏற்ற வேண்டும். இந்த நெய் தீபம் ஏற்றக்கூடிய திரியில் வெட்டிவேரினையும் சேர்த்து வைத்து, திரித்து இந்த வெட்டிவேரினால் தீபம் போட வேண்டும்.
வெற்றியை வாரி வழங்கக்கூடிய சக்தி என்பது இந்த வெட்டிவேருக்கு உண்டு. மேலும் பிள்ளையாருக்கு மிகவும் பிடித்தமானதும் இந்த வெட்டிவேர் தான். எனவே இந்த வெட்டிவேரை கொண்டு நெய் தீபம் ஏற்றும் பொழுது காரிய தடைகள் நீங்கி, நாம் வேண்டிய அனைத்தும் வெற்றியில் முடியும்.
இந்த முறையில் மஞ்சள் பிள்ளையாருக்கு முன்பாக தீபம் ஏற்றிவிட்டு, நமக்கு என்ன காரியம் நடக்க வேண்டுமோ அதனை மனதார நினைத்துக் கொண்டு “ஓம் கம் கணபதியே நமஹ” என்ற ஒரு வரி மந்திரத்தை கூறி வழிபட வேண்டும்.