படிகாரத்தை வைத்து ரகசியமாக இப்படி செய்து பாருங்கள்..!! நல்லவை அனைத்தும் உங்களை தேடிவரும்..!!

Photo of author

By Janani

படிகாரத்தை வைத்து ரகசியமாக இப்படி செய்து பாருங்கள்..!! நல்லவை அனைத்தும் உங்களை தேடிவரும்..!!

Janani

நமது முன்னோர்கள் படிகார கல் என்பதை பெரும்பாலும் திருஷ்டியை கழிப்பதற்காகவே பயன்படுத்தி வந்தனர். இந்த படிகாரம் என்பது எதிர்மறை ஆற்றல்கள் வீட்டிற்கு உள்ளே நுழையாமல் தடுத்து, வீட்டை பாதுகாக்க கூடிய ஒரு பாதுகாப்பு கவசம். எனவே இதனை வீட்டின் வாசலில் நமது முன்னோர்கள் கட்டி வைத்திருப்பார்கள்.

இந்த படிகாரம் என்பது ஆன்மீகம் ரீதியாகவும், தாந்த்ரீகம் ரீதியாகவும் பல்வேறு முறைகளில் பயன்பட்டு வருகிறது. ஒரு சிலருக்கு தூங்கும் பொழுது கெட்ட சக்திகளின் எண்ணங்கள் அல்லது கெட்ட கனவுகள் வந்து கொண்டே இருக்கும். இதனால் இரவில் தூங்க முடியாத நிலைமை ஏற்படும். இவ்வாறு இருப்பவர்கள் இந்த படிகார கல்லை தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால் எந்தவித கெட்ட கனவுகளும், தீய எண்ணங்களும் உருவாகாது.

அதேபோன்று சிறு குழந்தைகள் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென அழுகும். இதுபோன்ற சூழ்நிலைகளிலும் இந்த படிகார கல்லை குழந்தைகளுக்கு அருகில் வைக்கும் பொழுது, குழந்தைகள் நிம்மதியாக தூங்கும். வீடு முழுவதும் எதிர்மறை ஆற்றல்கள் பரவி இருப்பதாக நினைத்தால் அதற்கும் இந்த படிகாரத்தை வைத்து பலன் பெறலாம்.

வீட்டின் தெற்கு பகுதியில் இந்த படிகாரத்தை ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் போட்டு வைக்கலாம். இதேபோன்று ஒவ்வொரு அறையிலும் தெற்கு பகுதியில் வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு வைப்பதன் மூலம் வீடு முழுவதும் நேர்மறையான எண்ணங்கள் பரவும். மேலும் வீட்டில் உள்ள தீய சத்துகள் அனைத்தும் வெளியேறிவிடும்.

அதேபோன்று காரிய தடைகள், தொழிலில் தடைகள், முன்னேற்றத்தில் தடைகள், யாரேனும் ஒருவரால் கெடுதல்கள் ஏற்படுகிறது என்றாலும் திங்கள் கிழமை அல்லது வெள்ளிக்கிழமை நாட்களில் இரவு நேரத்தில் ஒரு சிறிய அளவு அடுப்புக்கரி மற்றும் படிகாரத்தை கருப்பு நிற துணியில் கட்டி, வலது உள்ளங்கையில் வைத்து நமது பிரச்சனைகள் மற்றும் என்ன பலன் கிடைக்க வேண்டும் என்பதை மனதார நினைத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு வேண்டிக் கொண்ட பின்னர் அதனை நமது தலையணைக்கு அருகில் அல்லது கீழே வைத்து ஒரு நாள் இரவு முழுவதும் தூங்க வேண்டும். இவ்வாறு ஒரு முறை செய்தால் போதும் தடைகள் அனைத்தும் விலகும். இவ்வாறு செய்து அடுத்த நாள் காலையில் அதனை வீட்டிற்கு சற்று தொலைவில் உள்ள ஒரு மரத்தின் அடியில் போட்டு விட வேண்டும். அதன் பிறகு வீட்டிற்கு வந்து குளித்து விட வேண்டும்.

வீட்டில் பணம், நகைகள் வைக்கக்கூடிய இடத்தில் சரியாக 60 கிராம் அளவுள்ள படிகாரத்தை வைக்கும் பொழுது பணவரவு அதிகரிக்கும். படிகாரத்திற்கு பணத்தை ஈர்க்கக்கூடிய சக்தி அதிகம். எனவே பணம் வைக்கக்கூடிய இடத்தில் வைத்தால் பண பற்றாக்குறை ஏற்படாது.

வீட்டின் நிலை வாசலில் கருப்பு நிற கயிறைக் கொண்டு இந்த பரிகாரக் கல்லை கட்டி தொங்க விடலாம். இதனால் வீட்டிற்குள் எந்த வித தீய சக்திகளும், கண் திருஷ்டிகளும் உள்ளே நுழையாது.