உங்கள் வீட்டில் இந்த மூன்று இடத்தில் மட்டும் கிராம்பை வைத்து பாருங்கள்..!! வாழ்க்கையே மாறும்..!!

Photo of author

By Janani

உங்கள் வீட்டில் இந்த மூன்று இடத்தில் மட்டும் கிராம்பை வைத்து பாருங்கள்..!! வாழ்க்கையே மாறும்..!!

Janani

ஒரு குடும்பத்தில் என்றென்றைக்கும் சந்தோசம், மகிழ்ச்சி, நிம்மதி, பணவரவு இது போன்ற அனைத்தும் இருந்து விட்டால் வாழ்க்கையே சொர்க்கமாக மாறிவிடும். அப்படிப்பட்ட சொர்க்கத்தை தரக்கூடிய நம்முடைய வீடு எப்பொழுதும் பாதுகாப்பாகவும், வீட்டில் இருப்பவர்களை எதிர்மறை சக்திகள் தாக்காமலும் இருக்க வேண்டும்.

இதுபோன்று எந்தவித தீய காரியங்களும் வீட்டில் நடைபெற கூடாது, குடும்பம் நல்லபடியாக வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக இந்த ஒரு எளிய பரிகாரத்தை செய்யலாம். அதாவது உங்கள் வீட்டில் இந்த மூன்று இடங்களில் மட்டும் கிராம்பை வைத்து பாருங்கள், நல்ல ஒரு அதிசயம் நடக்கும். குறிப்பாக உங்கள் வீட்டில் இருக்கும் வறுமை மற்றும் கண் திருஷ்டி நீங்கி பணப்புழக்கம் அதிகரிக்கும்.

கிராம்பு என்பது அனைவரது வீட்டிலுமே இருக்கும். இந்த கிராம்பை பயன்படுத்தி நாம் சமைக்கும் பொழுது அதனுடைய வாசனை வீடு முழுவதும் பரவி இருக்கும். இந்த கிராம்பின் இயற்கை குணமே தீய சக்திகளை விரட்டுவது தான். இத்தகைய குணம் கொண்ட கிராம்பை இந்த மூன்று இடங்களில் வைக்கும் பொழுது அதனுடைய சக்தி மென்மேலும் அதிகரித்து, தீய சக்திகள் நம்முடைய வீட்டிற்குள் வராமல் தடுத்து நிறுத்தி விடும்.

கிராம்பை இந்த மூன்று இடங்களில் வைக்கும் பொழுது வெளியில் சென்று வீட்டிற்கு வருபவர்களின் சோர்வு, கண் திருஷ்டி, அவர்கள் மேல் இருக்கும் பொறாமை குணம் ஆகிய அனைத்தையும் போக்கி விடும். 108 கிராம்பை மாலையாக கட்டி அம்பாளுக்கு சாத்தும் பொழுது, பணவரவு அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

1. உங்கள் வீட்டிற்குள் முதலில் நுழையக் கூடிய இடம் அதாவது வராண்டா அல்லது ஹால் போன்ற இடத்தில் தான் முதலில் கிராம்பை வைக்க வேண்டும். ஒரு சிறிய கண்ணாடி அல்லது செராமிக் பவுலில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு போட்டு அதில் மூன்று கிராம்பை வைத்து விட வேண்டும்.

கண்ணாடி அல்லது செராமிக் பவுல் இல்லாதவர்கள் அகல் விளக்கை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் கண்ணாடி பவுல் மிகவும் சிறந்தது.
இதைத் தவிர்த்து அலுமினியம், செம்பு இது போன்ற பாத்திரங்களை பயன்படுத்தக் கூடாது. வீட்டிற்கு உள்ளே நுழையக் கூடிய இடத்தில் இந்த கிராம்பை வைக்கும் பொழுது, எந்த ஒரு தீய சக்தியையும் வீட்டிற்கு உள்ளே நுழைய விடாமல் வெளியே துரத்தி விடும். மேலும் பண வரவையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.

2. அடுத்ததாக வீட்டின் ஹால் பகுதியில் வைக்க வேண்டும். அதாவது உங்கள் வீட்டிற்கு உறவினர்கள் வந்தால் எந்த இடத்தில் அதிகமாக அமர்ந்து பேசுவீர்களோ, அந்த இடத்தில் வைக்க வேண்டும். ஒரு சிறிய கண்ணாடி பவுலில் மூன்று கிராம்பை மட்டும் அந்த இடத்தில் வைக்க வேண்டும்.

உறவினர்கள் அல்லது வீட்டிற்கு அருகில் இருப்பவர்கள் வந்து பேசும்பொழுது அவர்களுடைய கஷ்டங்கள் துயரங்களை கூறுவார்கள், அல்லது இவர்கள் எப்படி இவ்வளவு வசதியாக இருக்கிறார்கள் என்ற எண்ணத்துடன் கூட அந்த இடத்தில் அமர்ந்திருக்கலாம். அப்பொழுது ஒரு நெகட்டிவ் எனர்ஜி அங்கு உருவாகிவிடும்.

எனவே அந்த இடத்தில் இந்த கிராம்பை வைக்கும் பொழுது அந்த நெகட்டிவ் எனர்ஜியை பாசிட்டிவ் எனர்ஜியாக மாற்றி கொடுக்கும்.

3. மூன்றாவதாக உங்களுடைய சமையல் அறையின் மேல் பகுதியில் அதாவது அதிகம் புலங்காத இடத்தில் மூன்றே மூன்று கிராம்பை மட்டும் வைக்க வேண்டும். ஏனென்றால் பெண்கள் தங்களுடைய கோபத்தையும், வெறுப்பையும் அதிகம் காட்டக் கூடிய இடம் என்றால் அது சமையலறை தான்.

அந்த சமையலறையில் மூன்று கிராம்பை மட்டும் தனியாக எடுத்து வைக்கும் பொழுது அந்த இடத்தில் பாசிட்டிவ் எனர்ஜி பரவ தொடங்கும்.
மேலும் சமையலறை என்பது பூஜை அறையைப் போன்றே மிகவும் முக்கியமான ஒரு அறையாகும்.

எனவே பெண்கள் அந்த இடத்தில் தங்களுடைய கோபம் மற்றும் வெறுப்பை காட்டாமல், மன அமைதியுடன் இருப்பது நல்லது.