உடலில் உள்ள தழும்புகள் வேகமாக மறைய இந்த வீட்டு வைத்தியத்தை உடனே ட்ரை பண்ணுங்க!!

Photo of author

By Sakthi

உடலில் உள்ள தழும்புகள் வேகமாக மறைய இந்த வீட்டு வைத்தியத்தை உடனே ட்ரை பண்ணுங்க!!
நம்முடைய உடலில் உள்ள தழும்புகள் வேகமாக மறைய நாம் துளசியை பயன்படுத்தலாம். துளசியானது நம்முடைய உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு சிறப்பான மருந்துப் பொருளாக பயன்படுகின்றது.
துளசியை நாம் இருமல், சளி போன்ற பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுத்தலாம். மேலும் துளசி சருமத்திற்கும் பல நன்மைகளை தருகின்றது. தற்பொழுது உடலில் உள்ள தழும்புகள் அனைத்தையும் மறைய வைக்க துளசியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து பார்க்கலாம்.
உடலில் உள்ள தழும்புகளை மறைய செய்ய துளசியை பயன்படுத்தும் முறை…
நாம் குளிக்கச் செல்லும் முன்பு துளசி இலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த துளசி இலைகளை குளிக்கும் தண்ணீரில் போட்டு சிறிது நேரம் அப்படியே விட வேண்டும்.
பின்னர் சிறிது நேரம் கழிந்து இந்த தண்ணீரில் நாம் குளிக்க வேண்டும். தொடர்ந்து இவ்வாறு துளசியை பயன்படுத்தி குளித்து வந்தால் உடலில் உள்ள தழும்புகள் அனைத்தும் மறையத் தொடங்கும்.
துளசியின் மற்ற பயன்கள்…
நாம் துளசியை வெறுமனே வாயில் போட்டு மென்று தின்று வந்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது. அது என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம்.
* துளசியை நாம் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது.
* துளசியை நாம் சாப்பிட்டு வந்தால் இதயம் பலம் பெறுகின்றது.
* துளசி இலைகளில் இருக்கும் சத்துக்கள் நம்முடைய சருமத்தை அனைத்து விதமான பாதிப்புகளில் இருந்தும் பாதுகாக்கின்றது.
* தலைவலியை குணப்படுத்த துளசி முக்கியமான மருந்து பொருளாகும்.
* துளசி இலைகளை நாம் சாப்பிட்டு வரும்பொழுது சிறுநீரகத்தில் கற்கள் இருந்தால் அதை குணப்படுத்துகின்றது. மேலும் சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கின்றது.
* துளசியை நாம் சாப்பிட்டு வரும் பொழுது கண்களின் ஆரோக்கியம் அதிகரிக்கின்றது.
* சுவாசக் கோளாறுகள் இருந்தால் அதை குணப்படுத்த நாம் துளசி இலைகளை சாப்பிட்டு வரலாம்.
* பூச்சிகள் எதாவது நம்மை கடித்தால் அந்த இடத்தில் துளசி சாற்றை பிழிந்தால் உடனே ஆறிவிடும்.