வெள்ளி மோதிரத்தை இந்த ஒரு விரலில் அணிந்து பாருங்கள்..!! நடக்கப்போகும் மாற்றங்களை நீங்களே காண்பீர்கள்..!!

Photo of author

By Janani

வெள்ளி மோதிரத்தை இந்த ஒரு விரலில் அணிந்து பாருங்கள்..!! நடக்கப்போகும் மாற்றங்களை நீங்களே காண்பீர்கள்..!!

Janani

பஞ்ச உலோகங்களில் மிகவும் அதிக ஈர்ப்பு சக்தியை கொண்டது வெள்ளி. தங்கத்தை காட்டிலும் வெள்ளிக்கு தான் அதிகப்படியான ஈர்ப்பு சக்தி உள்ளது. தங்கமானது தங்கத்தை மட்டுமே ஈர்க்கும் சக்தியை கொண்டது. ஆனால் வெள்ளியானது மற்ற விலையுயர்ந்த ஆபரணங்களையும், பணத்தையும் ஈர்க்கக்கூடிய அதீத சக்தி கொண்டது. இதனால்தான் பல தாந்திரீக விஷயங்களில் வெள்ளியை பயன்படுத்துகிறார்கள். அட்சய திருதி அன்றும் தங்கத்தை வாங்குவதை காட்டிலும் வெள்ளியை வாங்கினால் தான் பண வரவு அதிகமாக நமக்கு கிடைக்கும்.

தற்போதைய நிலையில் தங்கத்தை வாங்க முடியாவிட்டாலும் கூட வெள்ளியை சிறிதளவாவது நம்மால் வாங்க முடியும். பணக்கார கோவில்களான திருப்பதியில் பூஜை செய்யக்கூடிய பொருட்கள் அனைத்தும் வெள்ளியில் தான் இருக்கும். ஏனென்றால் வெள்ளி தான் அதிக அளவு ஈர்ப்பு சக்தியை கொண்டது. இதனால் தான் கோவில்களிலும் கூட வெள்ளியை பயன்படுத்துகின்றனர். நவகிரகங்களில் உள்ள சுக்கிரனின் ஆதிக்கம் கொண்டது தான் இந்த வெள்ளி.

ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் உச்ச பலம் அல்லது ஆட்சி பலம் இருந்தால் அந்த ஜாதகருக்கு பணம், பெயர், புகழ், ஆடம்பரமான வாழ்க்கை அதிக அனைத்துமே கிடைக்கும். அப்படிப்பட்ட சுக்கிரனின் ஆற்றலை பரிபூரணமாக ஈர்த்து தரக்கூடிய பண்பு இந்த வெள்ளிக்கு தான் உள்ளது. வைரம் மற்றும் அதிர்ஷ்ட கற்களை அணிவதற்கு அவரவர் ஜாதகத்தினை பார்த்துதான் அணிய வேண்டும். ஆனால் வெள்ளி மோதிரத்தினை அனைவருமே அணிந்து கொள்ளலாம். ஏனென்றால் வெள்ளி மோதிரம் தோஷங்கள் அற்றது.

நாம் அணியக்கூடிய இந்த வெள்ளி மோதிரம் நமக்கு அதிகபட்ச நன்மையை தர வேண்டும் என்றால், வளர்பிறையில் வரக்கூடிய வெள்ளிக்கிழமைகளில் இந்த வெள்ளி மோதிரத்தினை வாங்குவது மிகுந்த சிறப்பை தரும். அதேபோன்று வளர்பிறையில் வரக்கூடிய திருவோணம், ஏகாதசி ஆகிய நாட்களிலும் இந்த வெள்ளி மோதிரத்தினை வாங்குவது சிறந்த பலன்களை தரும். இத்தகைய நாட்களில் ராகு காலம் மற்றும் எமகண்ட நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் வாங்கிக் கொள்ளலாம்.

வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர ஹோரையில் இந்த வெள்ளி மோதிரத்தினை வாங்குவது மேலும் பல நன்மைகளைத் தேடித் தரும் என்று கூறப்படுகிறது. இந்த சுக்கிர ஹோரை வெள்ளிக்கிழமைகளில் காலை 6 மணி முதல் 7 மணி வரை, மதியம் 1 மணி முதல் 2 மணி வரை, இரவு 8 மணி முதல் 9 மணி வரை ஆகிய நேரங்களில் வரும்.

அதேபோன்று இந்த வெள்ளி மோதிரத்தினை காலை 10:30 மணி முதல் 11 மணி வரை ராகு காலம் இருக்கும். மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை எமகண்ட நேரம் இருக்கும். இந்த இரண்டு நேரங்களில் வெள்ளி மோதிரத்தினை கண்டிப்பாக வாங்கக்கூடாது.

சுக்கிர ஹோரையில் வாங்க முடியாதவர்கள் இந்த இரண்டு நேரத்தை தவிர்த்து மற்ற எந்த நேரங்களில் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். குறிப்பாக சாயும் காலம் நேரத்தில் வெள்ளி மோதிரத்தை வாங்கி நமது வீட்டிற்கு கொண்டு வருவது மிகவும் நன்மை வாய்ந்தது என்றும் கூறப்படுகிறது.

இவ்வாறு வெள்ளி மோதிரத்தினை வாங்கி வந்து ஒரு டம்ளர் அல்லது பஞ்ச பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி 10 துளசியினை போட்டு அதில் நாம் வாங்கி வந்த வெள்ளி மோதிரத்தினை இரவு முழுவதும் போட்டு விட வேண்டும்.

அடுத்த நாள் காலை அதாவது சனிக்கிழமை அன்று அந்த துளசித் தண்ணீரை செடிகளுக்கு அருகே ஊற்றிவிட்டு, அந்த மோதிரத்தினை நமது வீட்டிற்கு அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று பெருமானின் பாதத்தில் வைத்து யார் அந்த மோதிரத்தை அணிந்து கொள்ளப் போகிறாரோ அவரது பெயரில் ஒரு அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனை செய்து முடித்த பின்னர் அந்த மோதிரத்தினை வாங்கி கிழக்கு பார்த்தவாறு நின்று கைகளில் அணிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அணியக்கூடிய மோதிரத்தினை நமது இடது கையின் கட்டைவிரலை தவிர்த்து, மற்ற விரல்களில் அணிந்து கொள்ளலாம். அதிலும் குறிப்பாக ஆள்காட்டி விரல், நடுவிரல் மற்றும் சுண்டுவிரலில் அணிந்து கொள்வது மிகவும் நல்லது. வலது கையிலும் அணிந்து கொள்ளலாம், இடது கையிலும் அணிந்து கொள்ளலாம். ஆனால் இடது கையில் அணிந்து கொள்வது மேலும் பல சிறப்புகளைத் தேடித் தரும் எனவும் கூறப்படுகிறது. ஆண்கள், பெண்கள் யாராக இருந்தாலும் இடது கையில் மோதிரத்தினை அணிந்து கொள்வது சிறப்பு.