தனக்குத் தானே வேட்டு வைத்துக் கொண்ட திமுக!

Photo of author

By Sakthi

சென்னையிலே வருகின்ற ஆறாம் தேதி திமுக இப்ப பேசிட்டு இருக்கேன் சிறுபான்மை நல பிரிவு சார்பாக மாநாடு ஒன்று நடைபெற இருக்கிறது அந்த மாநாட்டிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமை தாங்கியிருக்கிறார் எது சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற இருக்கிறது இந்த மாநாட்டிற்கு இதயங்களை இணைக்கும் என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த நிலையில் i’m i’m கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசியை திமுகவின் சிறுபான்மைப் பிரிவு மாநில செயலாளர் மஸ்தான் ஹைதராபாத்தில் சந்தித்து பேசியதாக தகவல்கள் பரவ தொடங்கியது .

திமுக சிறுபான்மை நல பிரிவின் சார்பாக நடைபெறவிருக்கும் மாநாட்டில் பங்கேற்க வருமாறு ஒவைசிக்கு அழைப்பு விடுத்ததாக வெளியான தகவல் பொய்யானது என்று அந்தக் கட்சியின் சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு செயலாளர் மஸ்தான் மறுப்பு தெரிவித்திருக்கிறார். மாநாட்டில் பங்கேற்பதற்காக எப்போதும் போல திமுகவின் தோழமை கட்சிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். அதோடு ஒரு சில தொலைக்காட்சிகளில் வெளிவரும் செய்திகள் உண்மை தன்மை அற்றவை என்றும் தெரிவித்திருக்கிறார்.

ஆனாலும் ஐதராபாத்தில் மஸ்தான் ஒவைசியை சந்தித்ததற்கான புகைப்படங்களும், காணொளிகளும், வெளியாகி இருக்கின்றன. இதை தவிர திமுகவை சேர்ந்த மூத்த தலைவர் டி.ஆர் பாலு ஓவைசியுடன் தொலைபேசியில் உரையாடி இருக்கிறார்.

இது தொடர்பாக திமுகவின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவிக்கும் போது, சாதாரண நபருக்கு கூட ஓவைசி வாக்குகளை பிரிப்பவர் என்பது தெரிந்திருக்கும். அவரின் எல்லா முயற்சிகளும் எப்போதும் பாஜகவிற்கு உதவி புரிகின்றன. திமுக மாநாட்டிற்கு ஓவைசியை அழைப்பதன் மூலமாக ஸ்டாலின் நெடுங்காலமாக நம்பகமான கூட்டணி கட்சிகளான சிறுபான்மை கட்சிகளை உதாசீனம் செய்கிறார் என்று தெரிவித்தார் . ஓவைசி ஒரு உருது பேசும் இஸ்லாமியர் அவருக்கு தமிழ்பேசும் முஸ்லிம்களிடமிருந்து ஒரு வாக்கு கூட கிடைக்காது என தெரிவித்தார்.

ஒரு பீகாரைச் சார்ந்த பிரசாந்த் கிஷோருக்கு தமிழகத்தை பற்றி என்ன தெரியும். தமிழர்கள் ஒரு தனி இனம் நம்முடைய கலாச்சாரம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இருக்கிறது. அதன் காரணமாகத்தான் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் போன்ற கட்சிகள் இங்கே காலடி பதிக்க முடியாமல் போனது. ஒரு பீஹாரைச்சார்ந்த பிராமணருக்கு தமிழக வாக்காளர்களை எப்படி கையாள்வது என தெரியுமென நினைக்கிறாரா ஸ்டாலின்?,2014ம் வருடம் நரேந்திரமோடிக்கு தேர்தல் பிரச்சாரத்தில் பணிசெய்து இருக்கிறார்.. 2014ஆம் ஆண்டு பாஜகவின் வெற்றிக்காக வேலை செய்து இந்த நாட்டை நாசப்படுத்திய ஒருவர் திமுகவிற்கு விசுவாசமாக இருப்பாரா? திமுக பல அறிவாளிகளை கொண்ட கட்சியாக இருந்தாலும் அவர்களை நம்பாமல் பீஹாரிலிருந்து வந்த ஒருவரை நம்புகிறார் என தெரிவித்திருக்கின்றார்.

திமுகவின் ஏழைப்பணியாளர்கள் காட்சிக்காக கடுமையாக உழைத்து வரும்போது, கோடிக்கணக்கான கட்சிப்பணத்தை பிரஷாந்த் கிஷோருக்கு கொடுத்திருக்கிறார் .திமுக ஆரம்பிக்கப்பட்டு பிராமண எதிர்ப்பில் வளர்ந்தது. ஆனாலும் ஸ்டாலின் அதற்கு எதிர்மாறாக இருக்கிறார் அவர் பிரஷாந்த் கிஷோரை நம்பினால் நட்டாற்றில் விட்டுவிடுவார் என தெரிவிக்கிறார்கள்.