AMMK TVK: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், கட்சிகள் அனைத்தும் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. 2026க்கு முன்பு வரை திமுக, அதிமுக என்ற இரண்டு பெரிய கட்சிகளுடன் மட்டுமே பாமக, தேமுதிக போன்ற கட்சிகளும், சிறிய கட்சிகளும் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வந்தன. ஆனால் இந்த 2026 தேர்தலில் அதற்கு நேர்மாறாக தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பதற்காக கட்சிகள் அனைத்தும் முந்தியடித்து கொண்டு செல்கின்றன.
இது விஜய்க்கு நல்வாய்ப்பாக அமைந்த சமயத்தில் தான், அவரது பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்தது அவரின் அரசியல் வாழ்கையையே பின்னுக்கு தள்ளும் விதமாக அமைந்தது. விஜய் கட்சி ஆரம்பித்த சமயத்தில் தான், டிடிவி தினகரன் பாஜக கூட்டணியிலிருந்து விலகினார். அப்போது அவர் விஜய்யுடன் கூட்டணி அமைப்பார் என்று கூறி வந்தனர்.
இது குறித்து டிடிவி தினகரனிடம் கேட்ட போது, அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை, ஆனால் அதற்குரிய பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது என்றும் கூறினார். ஆனால் கரூர் சம்பவத்திற்கு பிறகு டிடிவி தினகரன் தனது முடிவை மாற்றியுள்ளார் என்று அமமுக வட்டாரங்கள் கூறி வருகின்றனர். முதலில் கரூர் சம்பவம் நிகழ்ந்த போது, விஜய்யிக்கு ஆதரவாக பேசி வந்த டிடிவி தினகரன், தற்போது திமுகவிற்கு சாதகமாக பேசுவது, அவர் திமுக கூட்டணியில் இணைவார் என்பதை உறுதிப்படுத்துகிறது என்று பலரும் கூறி வந்தனர்.
மேலும், கரூர் சம்பவத்திற்கு விஜய் தார்மீக பொறுப்பேற்றிறுக்க வேண்டும் என விஜய்க்கு எதிரான கருத்துகளை தெரிவித்திருந்தார். இதனால் கரூர் விவகாரத்திற்கு பிறகு விஜய்யின் அரசியல் பயணம் சரியும் என்பதை அறிந்த டிடிவி தினகரன் விஜய்யை கைகழுவி விட்டார் என்றும் அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.