தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிக்காக டி.டி.வி.தினகரன் 1 கோடி நிதியுதவி

0
166

தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிக்காக டி.டி.வி.தினகரன் 1 கோடி நிதியுதவி

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தாக்குதலானது உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் பரவி கடும் தாக்குதலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பானது இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை.

இது வரை இந்தியாவில் இந்த கொரோனா வைரஸ் 1251 நபர்களை தாக்கியுள்ளதகவும், அதில் 102 நபர்கள் குணமடைந்து விட்டதாகவும்,32 நபர்கள் இறந்துள்ளதாகவும் மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மத்திய மாநில அரசுகள் கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொது மக்கள் சமூக விலகலை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

இதனையடுத்து கொரோனா தடுப்பு பணிக்காக தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் என ஒவ்வொருவரும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிக்காக அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் ரூபாய்.1 கோடி நிதியுதவியாக அளித்துள்ளார். சட்டமன்ற உறுப்பினராக பதவி வகிக்கும் அவர் தன்னுடைய தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூபாய்.1 கோடியை தமிழக அரசுக்கு வழங்கியுள்ளார்.

Previous articleகொரோனா ஊரடங்கால் வீட்டில் கொரளி வித்தைக்காட்டும் நடிகை : கிளுகிளு வீடியோவால் கிறங்கிபோன ரசிகர்கள்!
Next article19 வருடத்திற்கு முன்பு இதே நாளில் சச்சின் நிகழ்த்திய சாதனை