GOVERMENT SCHOOL:2500 அரசு பள்ளிகளில் ஆசிரியர் இல்லை என ஆளும் திமுக அரசு மீது குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார் டிடிவி தினகரன்.
தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் இல்லாமல் இயங்குவதாக புகார்கள் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். மேலும் அரசு பள்ளிகளில் கல்வியின் தரம் குறைவாக இருக்கிறது. என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது . இதனால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்து வருகிறார்கள். இதனால் தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் உயர்வாக இருக்கிறது.
இந்த நிலையில் அரசு பள்ளிகள் ஆசிரியர்கள் இல்லாமல் இயங்குகிறது என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்த நிலையில் இது குறித்து டிடிவி தினகரன் அவர்கள் திமுக அரசை கண்டித்து பேட்டி ஒன்றில் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். அப்போட்டியில் அவர் பேசியதாவது. தமிகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகாலமாக 2500 அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாமல் செயல்படுகிறது என்ற தகவல் அதிர்ச்சியை தருகிறது.
இவ்வாறு இருந்தால் மாணவ,மாணவியரின் கல்வி கேள்வி குறியாகி உள்ளது. இது தான் திராவிட மாடல் ஆட்சியா? இது தான் திமுக அரசின் நல்லாட்சியா? என கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பாகவே அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணிக்களுக்கு ஆசிரியர்களை நிரப்ப வேண்டும் என்றார்.
மேலும் தொகுதி வாரியாக அரசுப் பள்ளிகளின் தரம் குறித்து ஆய்வு செய்வதாக மக்களை ஏமாற்றி வருவது திமுக அரசு என கண்டனம் தெரிவித்துள்ளார் டிடிவி தினகரன்.