TVK AMMK: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்கான தேர்தல் பணிகளில் சிறிய கட்சிகள் தொடங்கி திராவிட கட்சிகள் வரை ஈடுபட தொடங்கிவிட்டன. மேலும் கூட்டணி வியூகங்களும், தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையும், வேட்புமனு தாக்கல் செய்யும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியை தொடங்கி, இந்த கட்சி 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் என்று அறிவித்துள்ளார். மேலும் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என்றும், நான் தான் முதல்வர் வேட்பாளர் என்றும் பகிரங்கமாக அறிவித்து விட்டார்.
இவ்வாறான சூழலில் எடப்பாடி பழனிசாமியின் துரோகத்தை எதிர்த்து கட்சி ஆரம்பித்த டிடிவி தினகரன், அவரை வீழ்த்த வேண்டுமென பல்வேறு யுக்திகளை கையில் எடுத்துள்ளார். மேலும் NDA கூட்டணியில் இருந்த தினகரன், இபிஎஸ்யை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என்று கூறி கூட்டணியிலிருந்து விலகினார். இபிஎஸ்யை தவிர வேறு யார் முதல்வர் வேட்பாளராக இருந்தாலும் பாஜகவில் இணைவோம் என்று கூறிய வந்த இவர், முதல்வர் வேட்பாளர் மாற்றப்படாததால் தற்போது தவெகவில் இணைய போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
டிடிவி தினகரன் விஜய்யுடன் பேசிகொண்டுள்ளார் என்று அக்கட்சியின் நிர்வாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கூறி இதனை உறுதிப்படுத்தியுள்ளார். அந்த வகையில் தினகரன் தவெகவில் இணைய விஜய்யிடம் ஒரு கண்டிஷன் போட்டுள்ளாராம். இபிஎஸ்யை வீழ்த்த விஜய்யால் மட்டுமே முடியும் என்பதால், அதிமுகவையும் விமர்சிக்க வேண்டும் என்றும் இதன் மூலம் தான் அதிமுக வாக்குகளை கவர முடியும் என்றம் அவர் கூறியுள்ளாராம். மேலும் இபிஎஸ்யை கடுமையாக விமர்சிப்பதன் மூலம் அதிமுக பலமிழந்து அக்கட்சி பல பிரிவுகளாக பிளவுரம் என்று தினகரன் திட்டம் தீட்டுகிறார்.