AMMK ADMK TVK: அதிமுகவிலிருந்து இபிஎஸ்யால் வெளியேற்றப்பட்ட டிடிவி தினரகன் இபிஎஸ்யை எதிர்த்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். பிறகு பாஜக கூட்டணியில் இணைந்தார். ஒரு வருடத்திற்கு முன்பு சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அதிமுக-பாஜக கூட்டணி அமைத்தது. அப்போது இபிஎஸ் பாஜகவிடம் சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் போன்றோரை கூட்டணியிலிருந்து விளக்க வேண்டுமென நிபந்ததை விதித்தார்.
அப்போது அது கண்டுக்கொள்ளாத பட்சத்தில், அண்மையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் செயல்பாடுகள் பிடிக்காத டிடிவி தினகரன் பாஜக கூட்டணியிலிருந்து விலகியதோடு, இபிஎஸ்யை முதல்வர் வேட்பாளராக ஏற்கா முடியாது என்றும் கூறினார். மேலும் இபிஎஸ்யை தவிர வேறு யாரை முதல்வர் வேட்பாளராக நிறுத்தினாலும் கூட்டணியில் இணைவோம் என்று கூறி சலசலப்பை ஏற்படுத்தினார்.
இதனை தொடர்ந்து தினகரனிடம் பல்வேறு மத்திய அமைச்சர்கள் பேச்சு வார்த்தை நடத்தியும் அவர் அவருடைய முடிவில் உறுதியாக இருந்தார். இந்நிலையில் அவர் தவெகவில் இணைவார் என்றும் எதிர்ப்பார்க்கபட்டது. ஆனால் விஜய் கரூர் சம்பவத்திற்கு பிறகு அதிமுக கூட்டணியில் இணையும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் இபிஎஸ்யை முதல்வராக்கவா விஜய் கட்சி ஆரம்பித்தார் என்று விஜய்யை தூண்டிம் வகையில் பேசியுள்ளார். இது விஜய்-இபிஎஸ் இடையே தலைமை போட்டியை ஏற்படுத்தும் நோக்கில் உள்ளது என்று பலரும் கூறி வர, மற்றொரு கோணத்திலிருந்து பார்த்தால், அதிமுக-பாஜக கூட்டணியில் விஜய்யை முதல்வர் வேட்பாளராக்க திட்டமிடும் ஒரு செயலாகவே பார்க்கப்படுகிறது.
அவ்வாறு விஜய் முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் தினகரன் மீண்டும் பாஜக கூட்டணியில் இணைவார், அதுமட்டுமல்லாமல் இபிஎஸ்யை எளிதாக வீழ்த்த முடியும் என்ற நோக்கில் தான் தினகரன் செயல்பட்டு வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது.