AMMK: 2026 யில் நடக்க போகும் சட்டமன்ற தேர்தல் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முந்தைய தேர்தலை விட இம்முறை நடக்கும் தேர்தலில் ஏகப்பட்ட முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த முறை அதிமுக உடன் பாஜக, தமாகா கூட்டணி அமைத்துள்ள நிலையில், ஆளுங்கட்சியாக உள்ள திமுக உடன், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக போன்ற கட்சிகள் தொடர்ந்து அங்கம் வகித்து வருகின்றன. இவ்வாறான நிலையில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பின், இபிஎஸ்யின் துரோகத்தை எதிர்த்து கட்சி தொடங்கிய டிடிவி தினகரனின் நிலைப்பாடு என்னவென்றே தெரியவில்லை.
NDA கூட்டணியிலிருந்த இவர் அதிமுக-பாஜக கூட்டணி இணைந்ததாலும், இபிஎஸ்யை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என்றும் கூறி அந்த கூட்டணியிலிருந்தும் விலகினார். மீண்டும் இவரை NDAவில் சேர்க்க பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் அது கைகூடவில்லை. இதனால் இவர், திமுக அல்லது தவெகவில் இணைய வாய்ப்பிருக்கிறது என்ற கருத்தும் பரவியது. தினகரன் மற்றும் ஓபிஎஸ் இருவரும் கூட்டணி தொடர்பாக எங்களுடன் பேசி வருகிறார் என்று கூறிய செங்கோட்டையன் இந்த சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இதனால் அமமுக-தவெக கூட்டணி உறுதி அனைவரும் கூறி வந்தனர். இந்த சூழலில் செய்தியாளர்களை சந்தித்த தினகரன், எங்களுக்கு ஆண்டிபட்டி தான் புனித பூமியாக திகழ்கிறது. ஆண்டிபட்டியில் போட்டியிட்டு நான் வெற்றி பெற்றேன். எனவே அந்த தொகுதியில் போட்டியிட சீட் கொடுத்தால் அக்கட்சியுடன் கூட்டணி அமைப்பேன். இல்லையென்றால் தனித்து நிற்பேன் என்று கூறியுள்ளார். 2002, 20026 தேர்தலில் ஜெயலலிதாவும், 1984 தேர்தலில் எம்ஜிஆர்-யும் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் தினகரனும் இந்த தொகுதியை கைப்பற்ற நினைக்கிறார். இதனால் இவரின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.