Breaking News, Politics, State

செங்கோட்டையனை அழைத்த டிடிவி தினகரன்.. விஜய்யின் முடிவை எதிர்நோக்கும் KAS!!

Photo of author

By Madhu

TVK AMMK: அடுத்த வருடம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், எப்போதும் இல்லாத அளவிற்கு மாறாக இந்த முறை அரசியல் அரங்கு புதிய வேகமெடுத்துள்ளது. இந்த வேகத்தை மேலும் மெருகேற்றும் வகையில், பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதிலும் முக்கியமாக விஜய் கட்சி துவங்கியது தான் பெருமளவில் பேசப்படுகிறது. இந்நிலையில் விஜய் கட்சியுடன் எந்தவொரு கட்சியின் கூட்டணியும் உறுதியாகவில்லை. பல்வேறு கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், செங்கோட்டையன் தவெகவில் இணைந்து அதற்கு பலத்தை கூட்டியுள்ளார்.

இவர் இணைந்த கையுடன் டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா போன்றோரும் தவெகவில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது தற்போது வரை நடக்காத காரணத்தினால் இவர்கள் தவெகவில் இணைவதற்கு விஜய் சம்மதிக்கவில்லை என்று பலரும் கூறி வந்தனர். ஆனால் டிடிவி தினகரன், விஜயுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறி வந்தார். இவ்வாறான நிலையில் தான், செய்தியாளர்களிடம் பேசிய தினகரனிடம் கூட்டணி குறித்து கேட்ட போது, அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஒரே அணியில் இணைய வேண்டும் என்று கூறியுள்ளார்.

இவரின் இந்த கருத்து செங்கோட்டையனுக்கு மறைமுகமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது போல தெரிகிறது என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். செங்கோட்டையன் தவெகவில் இணைந்தாலும் அவரது சட்டை பையில் எப்போதும் ஜெயலலிதாவின் புகைப்படம் இருக்கிறது. மேலும், அவரது அலுவலகத்தில் கூட எம்ஜிஆர், ஜெயலலிதாவின் உருவப்படத்துடன் விஜய்யின் படமும் இருப்பதால், அம்மாவின் தொண்டர்கள் என்று தினகரன் செங்கோட்டையனை தான் குறிப்பிட்டுள்ளார் என்று பலரும் கூறுகின்றனர். இதற்கு விஜய்யின் பதில் என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

செங்கோட்டையனின் அண்ணன் மகன் கேட்ட பதவி.. தலையசைக்கும் இபிஎஸ்!!

SIR படிவம் கொடுக்கலையா போச்சு அவ்வளவுதான் !