தவெக-அமமுக கூட்டணி.. ஓப்பனாக பேசிய டிடிவி தினகரன்!! குளோஸ் ஆகும் இபிஎஸ்யின் சமஸ்தானம்!!

0
141
TTV Dinakaran spoke openly about TVK-AMMK alliance!! CLOSE is the capital of EPS!!
TTV Dinakaran spoke openly about TVK-AMMK alliance!! CLOSE is the capital of EPS!!

TVK AMMK: 2026 தேர்தலுக்காக தமிழக அரசியல் களம் வேகமெடுத்துள்ளது. திராவிட கட்சியான அதிமுகவும், திமுகவும், கூட்டணி குறித்து மூன்றாம் நிலை கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கடந்த சில வருடங்களாக அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால், இந்த தேர்தல் அதிமுகவிற்கு மிகவும் முக்கியம். அதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வது மட்டுமல்லாது, சில சவால்களையும் எதிர்கொண்டு வருகிறது. தேர்தல் நெருங்க நெருங்க அதிமுகவில் ஏகப்பட்ட சச்சரவுகள் நிலவி வருகிறது. அதில் முதன்மையாக பார்க்கப்படுவது, அதிமுகவில் ஏற்பட்ட பிரிவினைகள்.

பிரிந்து சென்றவர்களும், இபிஎஸ்யால் வெளியேற்றபட்டவர்களும் ஒரு அணியாக இணைந்து செயல்படுவதற்கு ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில், இபிஎஸ்யை முதல்வர் வேட்பாளர் ஏற்காத அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தற்போது நால்வர் அணியில் ஒருவராக இருப்பதால், இவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவென்று தெரியவில்லை. செய்தியாளர் சந்திப்பில் எப்போதும் ட்விஸ்ட் வைத்து பேசி வரும் இவர்கள் நால்வரும், தற்போது கூட்டணி குறித்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. விஜய்யுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு பதிலளித்த டிடிவி தினகரன், கூட்டணி குறித்து பேசி வருகிறோம்.

முடிவு என்ன என்பதை ஜனவரியில் அறிவிப்போம் என்று கூறியுள்ளார். இவருக்கு விஜய்யுடன் கூட்டணி அமைப்பதில் விருப்பம் இல்லையென்றால், அதை வெளிப்படையாக கூறி இருக்கலாம். அதனை தவிர்த்து அவர் கூறிய பதில் தவெக கூட்டணிக்கு மறைமுகமாக சம்மதம் தெரிவித்தது போல உள்ளது என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும் இபிஎஸ்யை தவிர வேறு யாரை வேண்டுமானாலும் முதல்வரை வேட்பாளராக ஏற்க சம்மதம், என்று கூறிய டிடிவி தினகரன், விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்வார் என்ற கருத்தும் வலுப்பெற்று வருகிறது.

Previous articleதிமுகவில் இணையும் அதிமுகவின் டாப் தலை.. செம்ம குஷியில் ஸ்டாலின்!! காலி ஆகும் இபிஎஸ்!!
Next articleபாஜகவில் ரீ என்ட்ரி கொடுக்கும் அதிமுகவின் முக்கிய தலைவர்.. அச்சத்தில் இபிஎஸ்!!