ADMK BJP: சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் , யார் யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது. இந்நிலையில் தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில், டி.டி.வி. தினகரன் பா.ஜ.க உடன் கூட்டணியில் இருப்பதாக திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பா.ஜ.க – வும் அ.தி.மு.க -வும் கூட்டணியில் இருந்து பிரிந்து தற்போது இணைந்துள்ளனர். அப்போது அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சில நிபந்தனைகளை முன்வைத்ததாக கூறப்படுகிறது.
அதில் பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோர் கலந்து கொள்ளக்கூடாது . இவர்கள் மூவரையும் கூட்டணியில் சேர்க்க கூடாது, அவர்கள் இருக்கும் மேடையில் நான் ஏற மாட்டேன் என்றெல்லாம் கூறியுள்ளார். பல ஆண்டுகளாக கூட்டணியிலிருக்கும் பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க-விற்கு இடையே தற்போது கருத்து வேறுபாடு நிலவி வரும் வேலையில் , நயினார் நாகேந்திரன் இவ்வாறு கூறியது, அ.தி.மு.க வின் நிலையை கேள்விக்குறியாக்கி உள்ளது.
இவர்கள் கூட்டணி அமைத்தது அ.தி.மு.க பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த கூட்டணியின் தொடர்ச்சியாக பா.ஜ.க. பொது கூட்டத்தில் இனி டி.டி.வி. தினகரன் பங்கேற்பார். டி.டி.வி. தினகரன் கூட்டணியில் இணைந்ததால் எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க கூட்டணியில் தொடர்வாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி இந்த கூட்டணியையும் முறித்து கொண்டால் கட்சி வலுவிழக்கும் அபாயம் உள்ளது.
அ.தி.மு.க-விலிருந்து எடப்பாடி பழனிசாமியால் வெளியேற்றப்பட்ட டி.டி.வி. தினகரன் ” அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்” என்ற புதிய கட்சியை தொடங்கினார். அப்போதிலிருந்தே அ.ம.மு.க விற்கும் , அ.தி.மு.க விற்கும் போட்டி நிலவி வருகிறது. இப்பொழுது அ.தி.மு.க தனி கட்சியாக மாறும் நிலையில் , அடுத்து யாருடன் கூட்டணியி ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது. கூட்டணியிலிருந்த தே.மு.தி.க உடனும் வாக்குறுதி அழித்துவிட்டு பின்வாங்கியதாக பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார் . பா.ஜ.க உடனும் முரண்பாடு உள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையை எடப்பாடி பழனிசாமி எவ்வாறு கையாள்வர் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.