நெட்டிசன்களுக்கு வேண்டுகோள் வைத்த துல்கர் சல்மான்!

Photo of author

By Sakthi

நெட்டிசன்களுக்கு வேண்டுகோள் வைத்த துல்கர் சல்மான்!

Sakthi

மலையாள திரைத்துறையில் முன்னனி கதாநாயகனாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் துல்கர் சல்மான் இதை தவிர்த்து அவர் தமிழ் தெலுங்கு ஹிந்தி போன்ற மற்ற மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். இந்த நிலையில், திரைப்படங்களில் பிஸியாக இருந்துவரும் துல்கர்சல்மான் தன்னுடைய பெயரில் சமூக வலைதளத்தில் போலி கணக்குகள் இருக்கிறது என்று தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் தெரிவித்திருப்பது என்னவென்றால் நான் இந்த கவுன்சிலில் இல்லை இந்த கணக்குகள் என்னுடையது கிடையாது. தயவு செய்து என்னை சமூக ஊடகங்களில் ஆள்மாறாட்டம் செய்ய வேண்டாம் குளிர்ச்சியாக இல்லை என்று பதிவு செய்திருக்கிறார்.