எதிர்மறை எண்ணங்களை குறைக்கும் மஞ்சள்!

0
173

மங்களப் பொருட்களின் வரிசையில் முன்னணியில் இருப்பது மஞ்சள் பெண்கள் முன்பெல்லாம் முகத்திற்கு கிருமி நாசினி எனப்படும் மஞ்சள் பூசி குளிப்பது வழக்கம் தற்போது நாகரீக மாற்றம் காரணமாக, மக்கள் அதனை கடைபிடிக்க தவறி விடுகிறார்கள்.

மஞ்சள் பூசி முகத்தில் தெய்வ கடாட்சம் அதிகரிக்கும் அழகு அதிகரிக்கும்.

மஞ்சள் மற்றும் மஞ்சள் நிற பொருட்களில் குருவின் ஆதிக்கம் நிறைந்திருக்கும், குருவின் ஆதிக்கம் நிறைந்த மஞ்சளை பெண்கள் பூசி குளித்து அம்மனை வழிபட்டால் மாங்கல்ய பலம் அதிகரிக்கும்.

கணவன்,மனைவியிடையே கருத்து வேறுபாடு மற்றும் சண்டை சச்சரவுகள் மிகுந்திருந்தால் மனைவி மஞ்சள் அரைத்து குழைத்து முகம் முழுவதும் தேய்த்து குளித்து வர சச்சரவுகள் நீங்கி தாம்பத்தியம் சிறக்கும். பணத்தை எதிர்நோக்கி வெளியில் செல்லும்போது இதனை நெற்றியில் இட்டு மற்றும் தன்னுடன் எடுத்துச் செல்லலாம். வீட்டில் மற்றும் வியாபாரம் தொழில் செய்யும் இடங்களில் பணப்பெட்டியில் மற்றும் பீரோவில் மஞ்சள் வைக்க எதிர்மறை எண்ணங்கள் குறைந்து ஐஸ்வர்யம் பெருகும்.

வீட்டில் முனை முறியாத பச்சரிசியில் மஞ்சள் கலந்து அச்சதை வைக்கும் பொழுது மங்கள நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டே இருக்கும் என சொல்கிறார்கள்.

காளிக்கு மிகவும் உகந்ததாக இருக்கும் மஞ்சள் ஜாதகத்தில் சனி மற்றும் ராகுவினால் உண்டாகும் தோஷத்தை குறைக்க கூடியது.

ஏழரைச் சனி, அஷ்டமச்சனி மற்றும் கெடுதலான திசை புத்திகள் நடந்தாலும் பாதிப்பு குறைந்து வெற்றிகள் அதிகரிக்கும்.

Previous article23-7-2022- இன்றைய ராசி பலன்கள்!
Next articleஆவின் நிறுவனத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு! தகுதியானவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்!