லண்டனில் 3 ஆண்டுகளாக ஓடிக் கொண்டிருந்த டிவி! வீட்டை திறந்து பார்த்த போது எலும்பு கூடாக இருந்த பெண்!

Photo of author

By Sakthi

லண்டனில் அப்பார்ட்மெண்ட் வீடு ஒன்றில் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் டிவி ஓடிக் கொண்டிருத்ததை அடுத்து அந்த அப்பார்ட்மெண்ட் வீட்டை திறந்து பார்த்த பொழுது பெரும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.
லண்டனில் ஹாம்மர்ஸ்மித் என்ற பகுதியில் பிறந்த ஜாய்ஸ் வின்சென்ட் என்ற பெண்மணி படிப்பை முடித்துவிட்டு வேலையில் சேர்ந்து தன்னுடைய அக்கா பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளார். எப்பொழுதும் சுற்றி நண்பர்களுடன் மகிழ்ச்சியான பெண்ணாக வாழ்ந்து வந்த ஜாய்ஸ் வின்சென்ட் அவர்கள் ஒரு கட்டத்தில் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் உறவை முறித்து தனியாக வாழத் தொடங்கினார்.
இதையடுத்து தனியாக வாழத் தொடங்கிய ஜாய்ஸ் வின்சென்ட் ஸ்கை சிட்டி என்ற பகுதியில் தனியாக அப்பார்ட்மெண்ட் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளார். இதையடுத்து ஒருநாள் இரத்த வாந்தி எடுத்த ஜாய்ஸ் வின்சென்ட் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற பொழுது அவருக்கு அல்சர் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
ஜாய்ஸ் வின்சென்ட் அவர்களுக்கு 2003ம் ஆண்டு அல்சர் இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து இவர் யார் கண்களிலும் படாமல் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இதையடுத்து 3 வருடங்களாக இவரை பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்காத நிலையில் 2006ம் ஆண்டு ஜாய்ஸ் வின்சென்ட் பற்றி தகவல் கிடைத்துள்ளது.
அதாவது மூன்று ஆண்டுகளாக வீட்டுக்கு வாடகை தராததால் வீட்டின் உரிமையாளரும் ஒரு சில பேரும் சென்று வீட்டின் கதவை தட்டி ஜாய்ஸ் வின்சென்ட் அவர்களை அமைத்துள்ளனர். ஆனால் ஜாய்ஸ் வின்சென்ட் கதவை திறக்கவில்லை. இதையடுத்து கதவை உடைத்து விட்டு வீட்டின் உள்ளே சென்று பார்த்த பொழுது அவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்த நிலையில் நின்றுள்ளனர்.
ஏன் என்றால் ஜாய்ஸ் வின்சென்ட் அவர்களின் வீட்டில் உள்ள டிவி ஓடிக் கொண்டே இருந்தது. அது மட்டுமில்லாமல் வீட்டின் சோபாவில் எலும்புக் கூடு ஒன்று இருந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த சிலர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஜாய்ஸ் வின்சென்ட் உடலை கைப்பற்றினர். பின்னர் விசாரணை நடத்திய காவல் துறையினர் இந்த பெண் இறந்ததற்கான காரணம் தெரியவில்லை. ஆனால் ஆஸ்துமா பிரச்சனையால் இறந்திருக்க கூடும் என்று தெரிவித்தனர்.
இருப்பினும் மூன்று ஆண்டுகளாக டிவி ஓடிக் கொண்டே இருந்தது யாருக்கும் சந்தேகத்தை எழுப்பவில்லை என்பது தான் இங்கு ஆச்சரியமான ஒன்றாக இருக்கின்றது. இருப்பினும் மூன்று ஆண்டுகளாக ஜாய்ஸ் வின்சென்ட் பற்றி எந்தவொரு தகவலும் கிடைக்காத நிலையில் அவருடைய உறவினர்கள் அல்லது நண்பர்கள் கூட அவரை பற்றி தேடாமல் போனதுதான் குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கின்றது.