TVK BJP: நடிகர் விஜய் கட்சி துவங்கியதிலிருந்தே அந்த கட்சிக்கு யாரும் எதிர்பார்த்திடாத அளவு ஆதரவு பெருகியது. இதனை கண்ட தமிழக கட்சிகள், தேசிய கட்சிகள், மூன்றாம் நிலை கட்சிகள் என அனைத்தும் விஜய்யுடன் கூட்டணி சேர ஆர்வம் காட்டி வந்தன. இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்ற பாஜகவும், அதிமுகவும் விஜய்யின் குரலாகவே ஒழித்து வந்ததை பார்க்க முடிந்தது. இதனை பொருட்படுத்தாத விஜய் கொள்கை எதிரியுடன் கூட்டணி இல்லையென்ற முடிவில் தெளிவாக இருந்தார்.
இதனை பொது மேடையிலும் அறிவித்திருக்கிறார். அப்போதும் கூட பாஜக விஜய்யை கூட்டணியில் சேர்ப்பதற்கான முயற்சியை கைவிடவில்லை. இது ஒரு புறம் இருக்க, திமுகவை சேர்ந்தவர்களும், தவெகவை எதிர்ப்பவர்களும், விஜய் பாஜகவின் பி டீம் என்று கூறி வந்தனர். இதனை தவெக தொடர்ந்து மறுத்து வந்தது. ஆனால் தற்போது அதனை உறுதிப்படுத்தும் வகையில் விஜய் ஒரு செயலை செய்திருக்கிறார். கரூர் சம்பவத்திற்கு பிறகு சிறப்பு பொதுக்குழுவை நடத்திய விஜய், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளரங்கு மக்கள் சந்திப்பை நேற்று நடத்தினார்.
இதில் பேசிய அவர், வழக்கம் போல திமுகவை கடுமையாக விமர்சித்தார். ஆனால் அவர் தனது அனைத்து உரைகளிலும் பாஜக, திமுக என இரண்டையும் சேர்த்து விமர்ச்சிப்பது வழக்கம். இந்த முறை பாஜகவை விமர்ச்சிக்காமல் இருந்தது அரசியல் வட்டாரத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுகவை சேர்ந்த முக்கிய அமைச்சர் ஒருவர் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை பற்றி விஜய் பேசாதது, விஜய் பாஜகவின் பி டீம் என்பதை உணர்த்துகிறது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

