விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்ற தேர்தலை குறி வைத்திக்கிறது. விஜய் இப்போது அவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிவடைந்ததும் அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என அவரின் கட்சியினர் சொல்கிறார்கள். ஏனெனில், கட்சி துவங்கி ஒரு வருடத்தை தாண்டிய நிலையிலும் விஜய் இன்னமும் களத்தில் இறங்கவில்லை. அவரது பெயரில் அறிக்கைகள் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது.
திமுகவை மட்டுமே திட்டியோ, விமர்சித்தோ மட்டுமே அவரின் அறிக்கைகள் வருகிறது. எனவே, அவரை பனையூர் பண்ணையார் எனவும், வொர்க் பிரம் ஹோம் பாலிட்டிக்ஸ் எனவும் அரசியல் கட்சியினர் விமர்சித்து வருகிறார்கள். ஆனால், விஜய் எதற்கும் விளக்கம் அளிப்பதில்லை.
இன்று, தமிழக வெற்றிக் கழக முகவர்களுக்கான கருத்தரங்கு இன்று கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் நடைபெற்றது. இதில், கலந்துகொள்வதற்காக விஜய் இன்று கோவை வந்தார். அவரை வரவேற்க விமான நிலையத்திலேயே அவ்வளவு கூட்டம் இருந்தது. அதன்பின் அவர் விமான நிலையத்தில் இருந்து கருத்தரங்கு நடக்கும் இடத்திற்கு வேனில் சென்றபோதும் வழிநெடுக ரசிகர் கூட்டம் இருந்தது. அதன்பின் அந்த கருத்தரங்களில் விஜய் பேசியதாவது:
கோவை என்றாலே மரியாதைதான். இது வாக்குக்காக மட்டும் நடக்கும் கூட்டம் இல்லை. மக்களோடு நாம் எப்படி இனைந்து செயல்பட வேண்டும் என்பதற்கான பயிற்சி பட்டறை. ஆட்சிக்கு வர வேண்டும் என நினைப்பதே மக்கள் நலனுக்காகத்தான். இதுக்கு முன் வந்தவர்கள் நிறைய பொய் பேசியிருப்பார்கள். நாம் மக்களின் நலனுக்காகவே ஆட்சிக்கு வரவேண்டும் என நினைக்கிறோம். பேர்தான் பயிற்சி பட்டறை. ஆனால், இது வேறலெவல் விழாவாக இருக்கிறது. மக்களை ஏமாற்றை ஆட்சிக்கு வர விடமாட்டோம். மனதில் நேர்மை இருக்கு. லட்சியம் இருக்கும் உழைக்க தெம்பு இருக்கு. செயல்படும் திறமை இருக்கு. அர்ப்பணிக்கும் குணம் இருக்கு. களம் இருக்கு. போய் கலக்குங்க. வெற்றி நிச்சயம்’ என அவர் பேசியிருக்கிறார்.
அவருக்கு முன்பேசிய தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ‘தவெக என்றாலே இப்ப எல்லாருக்கும் பயம் வந்துடுச்சி. வாக்குச்சாவடி முகவர்னா சாதாரன ஆள் இல்லை. கட்சி வெற்றிக்கு நீங்கதான் பொறுப்பு. தினமும் காலையில் 2 மணி நேரங்கள் செலவு செய்து உங்கள் பகுதியில் வசிக்கும் மக்களிடம் சென்று பேசுங்கள். அவர்களின் பிரச்சனை என்ன என கேளுங்கள். ஒரு வாட்ஸ் ஆப் குரூப் உருவாக்கி அதில் விவாதித்து அவர்களுக்கு உதவுங்கள். அரசு மருத்துவமனைகளில் எலிகள் ஓடிகொண்டிருக்கிறது. நம் கட்சியில் நிறைய கொத்தனார்கள் இருக்கிறீர்கள். அதையெல்லாம் போய் சரி செய்யுங்கள். இன்னும் 10 மாதங்கள் நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். 2026ல் நம் தலைவரே முதல்வராக வருவார். உங்கள் என்ன பிரச்சனை என்றாலும் கட்சி உங்கள் பக்கம் நிற்கும்’ என பேசியிருக்கிறார்.