ADMK TVK: சுமார் ஒரு வருடத்திற்கு முன்பே, அரசியல் கட்சிகளனைத்தும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வியூகங்களையும், கூட்டணி குறித்த பேச்சு வார்த்தைகளையும் தொடங்கிவிட்டன. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் பணியும் தீவிரமாகியுள்ளது. அவர் கட்சி ஆரம்பித்தது முதலே கூட்டணி அமைக்க தயார் என்றும், ஆனால் அந்த கூட்டணி தவெகவின் தலைமையில் தான் இயங்கும் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் விஜய்யின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்து விட்டது கரூர் சம்பவம். இந்த விவகாரத்தில் விஜய்யிக்கு ஆதரவாகவே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசி வந்தார். இபிஎஸ் தலைமை பொறுப்பை ஏற்றதிலிருந்தே அதிமுக தேர்தலில் தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. இந்நிலையில் 2026 தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்று இபிஎஸ் தனது அடியை கவனமாக எடுத்து வைத்து வருகிறார்.
ஆனால் இதனை அதிமுக வட்டாரங்கள் தவறான முடிவு என்று விமர்சித்து வருகின்றன. கரூர் சம்பவத்திற்கு முன்பே விஜய்யுடன் அதிமுக கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறது. அப்போது விஜய் முதல்வர் வேட்பாளராக நான் தான் நிற்பேன் என்றும், கூட்டணி எங்களின் தலைமையில் தான் அமையும் என்றும் என்றும் கூறியுள்ளார். ஆனால் இதற்கு இபிஎஸ் மறுப்பு தெரிவித்து விட்டார் என்றும் சொல்லப்படுகிறது.
ஆனால் கரூர் சம்பவத்திற்கு பின் விஜய் நிலை தடுமாறி இருப்பதால், இதனை சரியான சமயம் என்றுணர்ந்த இபிஎஸ் மீண்டும் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். ஆனால் அப்போதும் விஜய் இறங்கி வருவதாக தெரியவில்லை. இதனால், இன்னும் எத்தனை காலத்திற்கு எதிர்க்கட்சியாகவே இருப்பதென்று யோசித்த இபிஎஸ், விஜய்யின் நிபந்தனைக்கு கிரீன் சிக்னல் காட்டியதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.