TVK: தமிழகத்தில் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலுக்காக சிறிய கட்சிகள் தொடங்கி திராவிட கட்சிகள் வரை அனைத்தும் மும்முரமாக பணியாற்றி வருகின்றன. இம்முறை தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிலவும் என்று கணிக்கப்படுகிறது. அதிமுக, திமுக, நாதக, தவெக என இந்த கட்சிகளனைத்தும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் முக்கியமாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்கள் மிகுந்த ஆதரவு அளித்து வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது.
இந்நிலையில் மாநாடு, மக்கள் சந்திப்பு, உள்ளரங்கு மக்கள் சந்திப்பு, பொதுக்கூட்டம் என பல்வேறு நிகழ்ச்சிகளை தவெக நடத்தி வருகிறது. தவெக தனது முதல் தேர்தலை சந்திக்க இருக்கும் பட்சத்தில், விஜய் தான் முதல்வர் வேட்பாளர், தவெக தலைமையில் தான் கூட்டணி போன்ற முக்கிய அறிவிப்புகளை அறிவித்துவிட்டது. இதனை பலரும் விமர்ச்சித்து வந்தனர். முதல் தேர்தலிலேயே முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்படுவது தவறு என்றும், விஜய்யிக்கு கூடும் கூட்டம் அத்தனையும் வாக்காக மாறாது என்றும் கூறி வந்தனர்.
இந்நிலையில் இதனை மேலும் வலுப்படுத்தும் வகையில், மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன், விஜய்யை பொறுத்தவரை அவரது கட்சி மக்கள் மனதில் நிலைக்காது. சிந்தனையை தூண்டும் அளவிற்கோ, செயல்சக்தி என்று கூறும் அளவிற்கோ தவெக எந்த செயலையும் செய்யவில்லை. அது ஒரு டுபாக்கூர் பார்ட்டி. நாளுக்கு நாள் மாறிக்கொண்டிருக்கிறது. ஒரு மாநிலத்தில் என்ன இருக்கிறதென்று கூட விஜய்க்கு தெரியவில்லை. பிட்டை வைத்து பேசுகிறார். என்று கடுமையாக சாடியுள்ளார். இவரின் இந்த கருத்து பலராலும் பகிரப்பட்டு வருகிறது.