TVK CONGRESS: தமிழக அரசியலில் புது புயலை கிளப்பியுள்ளார் நடிகர் விஜய். இவரது கட்சிக்கு யாரும் எதிர்பார்த்திராத அளவு ஆதரவு குவிந்துள்ளது. இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதனை கண்ட கட்சிகளனைத்தும் அவரை கூட்டணியில் சேர்க்கவும், அவரது கூட்டணியில் இணையவும் ஆர்வம் காட்டி வந்தன. பாஜகவும், அதிமுகவும் இதனை வெளிப்படையாகவே செய்து வந்தது. இதற்காக கரூர் சம்பவத்தில் விஜய்யின் குரலாக ஒழித்து வந்தது.
ஆனாலும் விஜய்யின் சில நிபந்தனைகளாலும், பாஜக கொள்கை எதிரி என்பதாலும் இவர்களுடன் கூட்டணி இல்லையென்பதை விஜய் கூறிவிட்டார். அப்போதும் கூட பாஜக விஜய்யை சேர்க்கும் பணியை செய்து வருகிறது. மேலும் அதிமுக உடன் கூட்டணி இல்லை என்று விஜய் வெளிப்படையாக கூறவில்லை. விஜய்யின் கோரிக்கைக்கு இபிஎஸ் சம்மதம் தெரிவித்தால், அதிமுக-தவெக கூட்டணி உருவாக வாய்ப்புள்ளது. இதனை தொடர்ந்து விஜய்யும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ராகுல் காந்தியும் நெருங்கிய நண்பர்கள் என்பதால், தவெக-காங்கிரஸ் குறித்த விவாதங்களும் கிளம்பியது.
ஆனால் காங்கிரஸ் கட்சி விஜய்யை பயன்படுத்தி மட்டுமே வந்தது. காங்கிரஸும், திமுகவும் பல ஆண்டுகளாக கூட்டணியில் இருப்பதால், புதிய கட்சி பக்கம் காங்கிரஸ் செல்லாது என்ற கருத்தும் வலுப்பெற்றது. இவ்வாறு தவெக கூட்டணி குறித்து விமர்சனங்கள் தொடர்ந்த நிலையில், சமீபத்தில் விஜய் கட்சியில் சேர்ந்த நாஞ்சில் சம்பத் இது குறித்து பேசியுள்ளார். தவெகவுடன் கூட்டணி வைக்க காங்கிரசுக்கு ஆசை இருக்கிறது.
கூட்டணி குறித்த முடிவெடுக்க வேண்டியது காங்கிரஸ் தான் என்று கூறிய அவர், எந்த கட்சி கூட்டணிக்கு வந்தாலும் எங்கள் தலைவர் அவரை சேர்த்து கொள்வார் என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து திமுக-காங்கிரஸ் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தும் நோக்கில் அமைந்துள்ளது. மேலும், காங்கிரசுக்கு தவெகவில் சேர ஆசை இருக்கிறது என்று அவர் கூறியதால் காங்கிரஸ் கட்சியினர் தவெக மேல் அதிருப்தியில் உள்ளனர். இது மட்டுமல்லாமல், காங்கிரஸ் கூட்டணிக்கு விஜய் காத்திருக்கிறார் என்பது போல அவரது கருத்து உள்ளது என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.