மாணவர்களை சந்திக்க தயாராகும் தவெக தலைவர் விஜய்!! எப்போது தெரியுமா..முழு விவரம் இதோ!!!!

Photo of author

By Madhu

மாணவர்களை சந்திக்க தயாராகும் தவெக தலைவர் விஜய்!! எப்போது தெரியுமா..முழு விவரம் இதோ!!!!

Madhu

திரைத்துறையில் மிகவும் புகழ்பெற்ற நடிகரில் ஒருவராக இருப்பவர் விஜய். இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பிருந்தே அதாவது கடந்த 2023 ஆம் ஆண்டிலிருந்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சட்டமன்றத் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களை சென்னைக்கு வரவழைத்து பரிசு வழங்கி வருகின்றார். அப்போது விஜய் பரிசு பெறும் மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வார்.

ஆனால் தற்போது விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி முழு அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில் வரும் 2026 ஆம் தேர்தலில் போட்டியிட இருக்கின்றார். கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியை மிகவும் பிரம்மாண்டமாக நடத்தி வரும் நிலையில் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. விஜய் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இந்த ஆண்டு மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் என தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் கூறியிருந்த நிலையில் தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறையின் கீழ் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதம் 8 ஆம் தேதி வெளியானது. இந்த ஆண்டு 95% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

அதனை தொடர்ந்து மே 19ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியானது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சட்டமன்ற தொகுதி வாரியாக பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை விஜய் சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளின் பட்டியலை தயார் செய்து சட்டமன்ற தொகுதி வாரியாக மாவட்ட செயலாளர்கள் தலைமைக்கு அனுப்பியுள்ளனர்.

மேலும் புதுச்சேரியிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளை நேரில் அழைத்து விஜய் பாராட்ட இருக்கும் நிலையில் தற்போது அதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழக வெற்றி தழகத்தின் பொதுச்செயலாளர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியானது சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ செல்வங்களை தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் நேரில் அழைத்து பாராட்ட இருக்கின்றார்.

முதற்கட்டமாக மே 30ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மாமல்லபுரத்தில் உள்ள 4 பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ஹோட்டலில் பாராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பாராட்டு பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் ராணிப்பேட்டை, கடலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, சென்னை, செங்கல்பட்டு, சிவகங்கை, திண்டுக்கல் ,தேனி, நாகப்பட்டினம், திருவள்ளூர், புதுக்கோட்டை, வேலூர், ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 88 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் கலந்து கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். பாராட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.