TVK VCK: தமிழக அரசியலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தற்போது தன்னுடைய கூட்டணியை வலுப்படுத்தும் நோக்கில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அதிமுக கூட்டணியில் தவெக இணைய போவதாக பல்வேறு தகவல்கள் பரவி வந்த நிலையில் இபிஎஸ்யும் அதனை உறுதிப்படுத்தும் விதமாக பிள்ளையார் சுழி போட்டாச்சு என்று கூறியிருந்தார். இந்நிலையில் சமத்துவம், சமூக நீதியை மையமாக வைத்து இயங்கும் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் பல வருடங்களாக முக்கிய பங்காற்றி வருகிறது.
ஆனால் சில மாதங்களாக திமுக தலைமைக்கும் திருமாவளவனுக்கு சச்சரவு நிலவி வருகிறது. ஆட்சியில் பங்கு, அதிக தொகுதி என தொடரும் சண்டையை பயன்படுத்தி, தவெக விசிகவை தங்கள் பக்கம் இழுக்கலாம் என்று திட்டம் தீட்டி வருகிறது. மேலும் திருமாவளவனுக்கு மீதமிருக்கும் 6 மாத காலத்திற்காவது துணை முதல்வர் பதவியை வழங்க வேண்டுமென பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியது திருமாவை வேறு திசையை நோக்கி திருப்புவதாக இருக்கிறது என கூறி வந்தனர்.
இதையெல்லாம் அவரை தவெகவை நோக்கி திரும்புவதற்கான முயற்சியாக பார்க்கப்படுகிறது. ஆனால் திருமாவளவன் திமுக கூட்டணியிலிருந்து விலகுவதற்கான சாத்திய கூறுகள் ஏதும் இல்லை என்று விசிக வட்டாரங்கள் கூறுகின்றனர். மேலும் விஜய்யை மிகவும் கடுமையாக விமர்சித்து வரும், அவர் தவெக கூட்டணியில் இணைவதற்க்கு வாய்ப்புகள் குறைவு என்றும் சொல்லப்படுகிறது.

