TVK ADMK: அடுத்த வருடம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் மாநில கட்சிகள் அனைத்தும் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. அதிமுக உடன் பாஜக, தமாகா மட்டுமே கூட்டணியில் உள்ள நிலையில் வேறு எந்த கட்சியும் சேராதது அதிமுகவிற்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. பாமக, தேமுதிக போன்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், அதிமுகவின் உள்ளகத்தில் பல்வேறு பிரச்சனைகள் எழுந்து வருகின்றன.
அதிமுகவில் பல்வேறு பிரிவுகள் ஏற்பட்டு ஒவ்வொருவரும் தனித்த திசையில் செயல்பட்டு கொண்டிருப்பது தேர்தல் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. இதற்காக அதிமுகவிலிருந்து நீக்கபட்டவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் தலைவர் ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமிக்கு டிசம்பர் 24 வரை கெடு விதித்த நிலையில், நேற்று நடத்த ஆலோசனை கூட்டத்தில் இபிஎஸ் இருக்கும் கூட்டத்தில் இணைய போவதில்லை என்று ஓபிஎஸ் அறிவித்துள்ளார். இவ்வாறான நிலையில் தான் தவெக உடன் ஓபிஎஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செங்கோட்டையன் கூறியுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையில் ஓபிஎஸ், விஜய்யிடம் துணை முதல்வர் பதவியை கேட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. இது இன்னும் உறுதிப்படுத்தபடாத நிலையில் ஓபிஎஸ் ஏற்கனவே ஒரு முறை முதல்வராக இருந்தவர் என்பதால், துணை முதல்வர் பதவியை கேட்க வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வளவு பெரிய பதவியை மாற்று கட்சியிலிருந்து வந்தவர்களுக்கு தருவது தவெகவில் உட்கட்சி பிரச்சனையை ஏற்படுத்தும் என்று விஜய் யோசிப்பதாகவும் தவெக வட்டாரங்கள் கூறுகின்றன.