Erode by-election: ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடப் போகும் தவெக முக்கிய புள்ளி.
விஜய் முழுமையாக சினிமாவை விட்டு விலகி அரசியல் களத்தில் இறங்கி இருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து கடந்த அக்டோபர் மாதம் விழுப்புரத்தில் கட்சியின் முதல் மாநில மாநாடு பிரமாண்டமான முறையில் நடத்தி இருந்தார். அந்த மாநாட்டில் அவர் பேசிய கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பல லட்ச தொண்டர் முன்னிலையில் திமுகவை அரசியல் எதிரியாக வெளிப்படையாக அறிவித்து இருந்தார்.மேலும், தனது கட்சியினரை வருகின்ற 2026 ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி கட்சி பணிகளை செய்ய வேண்டும் என கூறி இருந்தார். மேலும் தவெக கட்சியுடன் கூட்டணி வைக்கும் கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு தெரிவித்து இருந்தார்.
அதன் பிறகு விஜய் கட்சி செயல்பாடுகள் அனைவராலும் உற்று நோக்கப்பட்டு வரப்படுகிறது. சமீபத்தில் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விசிக ஆதவ் அர்ஜுனா விஜய்க்கு ஆதரவாக கூட்டணி கட்சியான திமுகவை எதிர்த்து பேசினார் இது தற்போது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.
விஜய் உடன் தவெக கட்சியில் ஆதவ் அர்ஜுனா இணைய உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இந்த நிலையில் இன்று, ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவினால் உயிரிழந்து இருக்கிறார். எனவே வரும் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் தவெக சார்பில் விஜய் அல்லது ஆதவ் அர்ஜுனா போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.