தவெக-வைத்தியலிங்கம்.. அவர் செங்கோட்டையன் மாதிரி இல்ல!! தினகரன் சொல்வதென்ன!!

0
155
TVK-Vaidhyalingam.. He is not like Sengottaiyan!! What Dinakaran says!!
TVK-Vaidhyalingam.. He is not like Sengottaiyan!! What Dinakaran says!!

AMMK TVK ADMK: 2026 இல் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் அதற்கான தேர்தல் பணிகளில் தேர்தல் ஆணையமும், தமிழக கட்சிகளும் தீவிரமாக உழைத்து வருகின்றன. கூட்டணி வியூகங்களும், தொகுதி பங்கீடு குறித்தும் அதிமுகவும், திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளிடம் விவாதித்து வருகின்றன. இந்நிலையில் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், விஜய் தனது ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியாக மாற்ற, அது பெருமளவு ஆதரவை பெற்றுள்ளது.

மேலும், இந்த கட்சியில் இணைந்த செங்கோட்டையன், அதிமுகவிலிருக்கும் முக்கிய அமைச்சர்களை தவெகவில் சேர்ப்பேன் என கூறி இருந்தார். அதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஓபிஎஸ்யின் தீவிர ஆதரவாளரான வைத்தியலிங்கம் தவெகவில் இணைய போவதாக தகவல் பரவி வந்தது. இது குறித்து வைத்தியலிங்கம் எந்த கருத்தையும் கூறாத நிலையில், அது உறுதி என அனைவரும் நினைத்தனர்.

இவ்வாறான நிலையில் இது குறித்து பேசிய, டிடிவி தினகரன், நான் உறுதியாக சொல்கிறேன், முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் தவெகவில் இணைய மாட்டார் என்றும், அவர் நன்கு யோசித்து முடிவெடுக்க கூடியவர் என்றும் கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து செங்கோட்டையனை மறைமுகமாக விமர்சித்தது போல் உள்ளது என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும் செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்த போது அதனை பற்றி அவர் என்னிடம் கூறவில்லை என்று தினகரன் கூறியது அவர்களுக்குள் உள்ள முரண்பாட்டை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. 

Previous articleடிசம்பர் 14 யில் நயினார்.. இன்னக்கி எடப்பாடி பழனிசாமி!! பாஜக போடும் அரசியல் கணக்கு!!