Vijay: தவெக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கோள் இருக்கிறார்.
தமிழக திரைப்பட துறையில் உச்ச நட்சத்திர நடிகராக இருக்கும் போது சினிமாவில் இருந்து முற்றிலும் விலகி அரசியல் களத்தில் இறங்கினார். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரி மாதத்தில் தொடங்கினார். விழுப்புரத்தில் கட்சியின் முதல் மாநில மாநாடு நடத்தினார். அந்த மாநாட்டில் பல 8 லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் கலந்து கொண்டார்கள்.
இந்த மாநாட்டில் தவெக கட்சியின் கொள்கை, கோட்பாடுகள் அறிவிக்கப்பட்டது. மேலும், திமுகவை அரசியல் எதிரியாகவும், பாஜகவை கொள்கை எதிரியாக அறிவித்து இருந்தார் விஜய். அடுத்தபடியாக ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற தவெக கட்சியின் கோட்பாடு மிகப் பெரிய அளவில் அரசியல் வட்டாரத்தில் பெசிப்பத்து.
அதன் பிறகு தனது சென்னை பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தி 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் ஒரே மேடையில் திருமாவுடன் விஜய் பங்கேற்க உள்ளார் என்ற செய்தி திமுக கூட்டணி விசிக வில் சலசலப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் பெஞ்சல் புயல் பாதிப்புகளை நேரில் வந்து உதவிகளை செய்ய வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தை விட்டு வெளியே வந்து அரசியல் களத்தில் செயல்படவில்லை என விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகர் மற்றும் தவெக கட்சி நிர்வாகியாக இருக்கும் தாடி பாலாஜி பேசி இருக்கிறார்.
அதாவது, செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டியில் வருகின்ற ஜனவரி 27 ஆம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் உள்ள மாவட்டங்களுக்கு விஜய் அரசியல் பயன் மேற்கொள்ள இருக்கிறார் என பேசி இருக்கிறார்.