TVK VSK DMK: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்கான பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் மும்முரமாக பணியாற்றி வருகின்றன. தற்போது தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திமுக 2026 தேர்தலிலும் வெற்றி பெற வேண்டுமென பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் சூழலில், அதன் கூட்டணி கட்சிகளின் செயல்பாடு அதனை பின்னுக்கு தள்ளும் வகையில் அமைந்துள்ளது. கூட்டணி கட்சிகளின் துணை இல்லாமல் ஒரு கட்சியால் ஆட்சிக்கு வருவது முடியாத காரியம். இதற்காக திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் இணக்கமாக இருக்கிறது. ஆனால் கூட்டணி கட்சிகள் வேறு வகையான முடிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன.
அந்த வகையில், நடிகர் விஜயின் அரசியல் வருகையால், காங்கிரஸ் தவெக உடன் இணையும் போக்கிய காட்டி வரும் வேலையில், அடுத்ததாக நீண்ட நாட்களாக திமுக உடன் இருந்து வரும் விசிகவும் விஜய் உடனான கூட்டணி முடிவை நோக்கி நகர்கிறது என்றே சொல்லலாம். இதனை உறுதிப்படுத்தும் விதமாக சில சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. விசிகவின் தலைவர் திருமாவளவன் விஜய்யின் வருகையை பாராட்டி வருவது மட்டுமல்லாமல், விஜய்க்கு முதலில் வரவேற்பு அளித்தது நாங்கள் தான் என்றும் கூறியுள்ளார். மேலும், இவர் திமுகவில் இருந்து கொண்டு விஜய்யை விமர்சிக்காதது பல்வேறு விமர்சனங்களுக்கு வழி வகுத்தது.
இவ்வாறான நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், தவெக கூட்டணிக்கு விசிக வருகிறதா என்பதை விட, விசிக தொண்டர்கள் வருகிறார்கள் என்பதே உண்மை என்று கூறியுள்ளார். தவெக-விசிக கூட்டணி அமைக்குமா என்ற விவாதத்திற்கு, செங்கோட்டையனின் பதில் முற்றுப்புள்ளியாக அமைந்துள்ளது. இதனால் தேர்தலுக்கு முன் விசிக, விஜய் முன்னிலையில் தவெகவில் சேரும் என்பது நிரூபணமாகியுள்ளது.