CONGRESS TVK: விஜய் கட்சி ஆரம்பித்ததிலிருந்தே அவர் யாருடன் கூட்டணி அமைப்பார் என்று அனைவரும் எதிர்நோக்கி காத்திருந்தனர். ஆனால் கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் பாஜக உடன் நெருக்கம் காட்டுவதாகவும் சில தகவல் பரவியது. ஆனால் தற்போது புதிய திருப்பமாக இருப்பது என்னவென்றால் விஜய்- காங்கிரஸ் கூட்டணி தான். ஆரம்பத்திலிருந்தே விஜய்க்கும், ராகுல் காந்திக்கும் நல்ல நட்புறவு இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று.
இந்நிலையில் கரூரில் நடைபெற்ற துயர சம்பவம் தொடர்பாக கட்சிகள் அனைத்தும் விஜய்யை குறை கூறி வந்த சமயத்தில், ராகுல் காந்தி விஜய்யிடம் தொலைபேசியில் பேசி ஆறுதல் அளித்ததாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மீது வழக்கு பதியப்பட்ட போது, இதற்கு காரணமான விஜய் மீது ஏன் வழக்கு தொடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பபட்டது.
இதற்குறிய பதிலை ஆராயும் போது தான், திமுக கூட்டணியிலிருக்கும் காங்கிரஸ் விஜய் மீது வழக்கு பதிய வேண்டாமென்று வற்புறுத்தி கூறியதாகவும், அதனால் தான் திமுக அதனை மறுத்தது என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் தவெகவை சேர்ந்த ஆதவ் அர்ஜுனா டெல்லி பயணம் மேற்கொண்டது, பாஜக தலைவர்களை சந்திக்க தான் என்று பலரும் கூறி வந்தனர். ஆனால் இதனை மற்றொரு கோணத்திலிருந்து பார்த்தால், ராகுல் காந்தியை சந்தித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பதற்க்காக விஜய் அவரை டெல்லிக்கு அனுப்பினார் என்ற செய்தியும் பரவி வருகிறது.