DMK TVK: 6 வது முறையாக தமிழகத்தில் ஆட்சி அமைத்திருக்கும் திமுக தொடர்ந்து 7 வது முறையும் ஆட்சி கட்டிலை தன் வசப்படுத்தியே வைக்க வேண்டுமென தீவிரமாக போராடி வருகிறது. திமுகவை எதிர்க்கும் ஒரே பெரிய திராவிட கட்சி அதிமுக தான். திமுகவிலிருந்து பிரிந்து, அதிமுக உருவான நாள் முதல் தற்போது வரை அந்த நிலை தான் தொடர்கிறது. ஆனால் தற்போது அதனை உடைத்தெரியும் வகையில் உதித்துள்ள புதிய கட்சி தமிழக வெற்றிக் கழகம். அதிமுக தனது அனைத்து கூட்டத்திலும், திமுக அரசு செய்த தவறுகளை சுட்டி கட்டி பேசி வருவதை தவெகவும் கையில் எடுத்துள்ளது.
2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக 2026 வரை மக்களுக்கு பல நன்மைகளை செய்திருந்தாலும், அவர்கள் துன்ப காலத்தில் மக்களுடன் இல்லையென்பதே மக்களின் கோபம். கரூர் சம்பவம் நடந்த போது, உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், கள்ளக்குறிச்சியில் நடந்த சாராய பலிக்கு மட்டும் ஏன் செல்லவில்லை என்ற கேள்வி அனைத்து மக்களின் மனதிலும் உள்ளது. மேலும் தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும், பாலியல் வன்முறைகளுக்கு எதிராக மற்ற நாடுகளில் உள்ளது போல கடுமையான சட்டம் தமிழகத்திலும் இயற்ற வேண்டுமென பல போராட்டங்கள் நடத்தியும் அதற்கான ஏற்பாடுகள் இதுவரை எட்டப்படவில்லை.
இது மட்டுமல்லாமல், ஆணவ படுகொலைகளுக்கு எதிராக தனி சட்டம் இயற்ற வேண்டுமென, திமுக கூட்டணி கட்சிகளே பல முறை கோரிக்கை வைத்தும், 2026 இல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து சட்டசபையில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2020 உடன் ஒப்பிடும் போது 2021 முதல் 2026 வரை திமுக அரசில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நிறைய அதிகரித்துள்ளது என்று கருத்து கணிப்பு கூறுகிறது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில், தவெகவின் கொள்கை பரப்பு பொது செயலாளர் அருண்ராஜ் ஒரு கருத்தை கூறியுள்ளார். முதலில் மக்களுக்கு நல்லாட்சி கொடுக்க வேண்டும். அடிப்படையான சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும். அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். இதை செய்தால் தான் வாக்களிப்பார்களே தவிர, கட்டமைப்பு இருந்தால் மட்டும் யாரும் வாக்களிக்க மாட்டார்கள். திமுக மீது மக்கள் தற்போது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்று கூறினார்.

