வேலை தேடுபவர்களுக்கு டுவிட்டர் ஹயரிங்! லிங்கிடுஇன் செயலிக்கு போட்டியாக களத்தில் இறங்கிய டுவிட்டர்!!

0
113

வேலை தேடுபவர்களுக்கு டுவிட்டர் ஹயரிங்! லிங்கிடுஇன் செயலிக்கு போட்டியாக களத்தில் இறங்கிய டுவிட்டர்!!

 

பலருக்கும் பலவிதமான வேலைகளை வழங்கும் நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக இருக்கும் லிங்கிடுஇன் நிறுவனத்திற்கு போட்டியாக தற்போது டுவிட்டர் நிறுவனம் டுவிட்டர் ஹயரிங் என்னும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.

 

வேலை வாய்ப்புகள் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள நாக்குரி, இன்டீட், ஷைன், டைம்ஸ் நியு ஜாப், ஹைர் மீ, வொர்க் இந்தியா போல பல நிறுவனங்கள் உள்ளது. இந்த நிறுவனங்களுக்கு இடையில் லிங்கிடு-இன் நிறுவனமும் அதிகம் நபரால் வேலை வாய்ப்புகள் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள பயன்படுகின்றது. தற்பொழுது லிங்கிடு இன் நிறுவனத்திற்கு போட்டியாக டுவிட்டர் நிறுவனம் களத்தில் இறங்கியுள்ளது.

 

டுவிட்டர் நிறுவனமானது டுவிட்டர் செயலியில் உறுதி செய்யப்பட்ட கணக்குகளின் மூலமாக அதாவது வெரிப்பைய்டு அக்கவுண்ட்ஸ்(Verified Accounts) என்ற அந்தஸ்தை பெற்ற கணக்குகளின் மூலமாக இந்த டுவிட்டர் ஹயரிங் வசதியை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று அறிவித்துள்ளது.

 

அதன்படி வெரிபைய்ட் செய்யப்பட்ட நிறுவனங்களின் டுவிட்டர் பக்கதில் பயோ(Bio) என்ற பகுதியில் அவர்களின் சுயவிவரங்கள் குறித்த தகவல்கள் இருக்கும். தற்பொழுது டுவிட்டர் கொண்டு வந்துள்ள புதிய டுவிட்டர் ஹயரிங் வசதி மூலமாக பயோ பகுதியில் நிறுவறங்களில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த தகவல்களை பதிவிட முடியும்.

 

இந்த வசதி மூலமாக வேலை வாய்ப்பு தேடி அழையும் நபர்கள் தங்களுக்கு விருப்பமான நிறுவனங்களின் வேலை வாய்ப்பு குறித்த தகவல்களை எளிமையாக அறிந்துகொள்ள முடியும். மேலும் நிறுவனங்களின் இணையதளத்தை பயன்படுத்தி அந்தந்த நிறுவனங்களில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்து விவரமாக அறிந்து கொள்ளவும் முடியும். எளிமையாக விண்ணப்பித்துக் கொள்ளவும் முடியும்.

 

Previous article6 முதல் 12 வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு!! புதிய அறிவிப்பை வெளியிட்ட பள்ளிகல்வித்துறை!!
Next articleஇனி அனைத்து நாடுகளிலும் இதனை பயன்படுத்தலாம்!! வெளிநாடுகளில் பரவும் இந்திய செயலி!!