யானை தாக்கியதில் இருவர் உயிரிழப்பு:? 200-க்கும் மேற்பட்ட மக்கள் சாலை மறியல்?

Photo of author

By Pavithra

ஓசூர் அருகே புலியரிசி கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் முனிராஜ் மற்றும் ராஜேந்திரன் என்பவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓசூர் அருகே உள்ள புலியரசி என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முனிராஜ் என்பவரும்,ராஜேந்திரன் என்பவரும்.முனிராஜ் என்பவர் டிரைவராகவும் ராஜேந்திரன் என்பவர் விவசாயமும் பார்த்து வருகின்றனர்.

இவர்கள் இருவரும் இன்று அதிகாலை புலியரசி கிராமத்திற்கு பக்கத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்றுள்ளனர்.அப்போது அங்கு மறைந்திருந்த ஒற்றை காட்டு யானை இருவரையும் துரத்தி சென்று கடுமையாக தாக்கியுள்ளது.இதில் காட்டு யானை தாக்கியதால், முனிராஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.ராஜேந்திரன் என்பவர் பலத்த காயமடைந்த நிலையில் கிடந்துள்ளார். இதனை கண்ட பொதுமக்கள் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இருந்தபோதிலும்,அவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காட்டு யானை தாக்கினர். பின்னர் முனிராஜ் உயிரிழந்த இடத்திலேயே அவரது உடலையும் எடுக்காமல் நியாயம் வேண்டி போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.இதனை தொடர்ந்து திடீரென்று அங்கு கூடியிருந்த மக்கள் அனைவரும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.பொதுமக்களையும் விவசாய நிலங்களையும் அச்சுறுத்தி சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளை அந்த பகுதியில் இருந்து விரட்ட வேண்டுமென்று அவர்கள் அந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வைத்தனர்.

இதனால் அப்பகுதியில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த சூளகிரி காவல்துறையினர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.தற்போது வரை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.இருந்த போதிலும் மக்கள் இன்னும் போராட்டத்தை கைவிட வில்லை என்று தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
இதனால் தற்போது அந்தப் பகுதியில் மிகுந்த பரபரப்பு நிலவி வருகின்றது.