விறுவிறுப்பாக நடைபெற்ற யு.எஸ்ஃஓபன் இறுதி போட்டி!!! சேம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்!!!

0
152
#image_title

விறுவிறுப்பாக நடைபெற்ற யு.எஸ்ஃஓபன் இறுதி போட்டி!!! சேம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்!!

நேற்று(செப்டம்பர்10) விறுவிறுப்பாக நடைபெற்ற யு.எஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதி போட்டியில் செர்பியாவை சேர்ந்த வீரர் நோவக் ஜோகோவிச் சேம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

2023ம் ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாமான யு.எஸ் ஓபன் டென்னிஸ் தொடர் கடந்த ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி நியூயார்க்கில் தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, பிரேசில், ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற பல நாடுகளில் இருந்து வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். யு.எஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதி போட்டி நேற்று(செப்டம்பர்10) நடைபெற்றது.

இறுதிப் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிச் அவர்களும் ரஷ்யா நாட்டை சேர்ந்த டெனில் மேத்வதேவ் அவர்களும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் 6-3, 7-6, 6-3 என்ற செட் கணக்கில் இரஷ்யாவை சேர்ந்த டெனில் மேத்வதேவ் அவர்களை செர்பியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிச் அவர்கள் வீழ்த்தி சேம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

2023ம் ஆண்டுக்கான இறுதி கிராண்ட்ஸ்லாமான யு.எஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் சேம்பியன் பட்டம் வென்ற நோவக் ஜோகோவிச் அவர்கள் தனது 24வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று உலக சாதனையை சமன் செய்துள்ளார்.

நோவக் ஜோகோவிச் அவர்கள் இதுவரை 10 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். 7 விம்பிள்டன் ஒபன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். மேலும் 4 யு.எஸ் ஓபன் டென்ன்னிஸ் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும், 3 பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் வென்றுள்ளார்.

 

Previous article8 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்!! மாதம் ரூ.14,000/- வரை சம்பளத்தில் சூப்பர் வேலை ரெடி!!
Next articleவந்தாச்சு மத்திய அரசு வேலை!! ஆதார் ஆணையத்தில் பணிபுரிய ஆசையா? விண்ணப்பம் செய்ய இன்றே இறுதி நாள்!!