ஜூனியர் ஆசிய கோப்பை! அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி!

0
130

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகின்றது இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் சந்தித்தனர்.

முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 259 ரன்கள் சேர்த்தது அந்த அணியின் இஜாஸ் அகமது 86 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார், சுலைமான் சுபி 73 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

இந்திய அணியின் சார்பாக ராஜ்வரதன், விக்கி மற்றும் ராஜ் பாவா, உள்ளிட்டோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

இதனைத்தொடர்ந்து 260 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஹர்னூர் சிங், ரகுவன்ஷி ஜோடி பொறுப்புடன் ஆடியது.ஹர்னூர் சிங் 65 ரன்களும், ரகுவன்ஷி 35 ரன்களும், சேர்த்து ஆட்டமிழந்தார்கள்.

அதனடிப்படையில் அதன்பிறகு ஜோடி சேர்ந்த ராஜ்பாவா, கௌஷல், ஜோடி மிக நிதானமாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.

கடைசியில் இந்திய அணி 48.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலமாக இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறி இருக்கிறது. மற்றொரு போட்டியில் பாகிஸ்தான் அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறி இருக்கிறது.

Previous articleநோய் தொற்று பாதிப்பு எதிரொலி! டெல்லியில் அமலானது இரவு நேர ஊரடங்கு!
Next articleஇங்கிலாந்தில் உச்சமடைந்த நோய் தொற்று பாதிப்பு!