அனுமதி இன்றி பரப்புரை மேற்கொண்டதாக கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின்! கொந்தளித்த திமுக நிர்வாகிகள்!

Photo of author

By Sakthi

அனுமதியின்றி தேர்தல் பரப்புரை செய்ததாக உதயநிதி ஸ்டாலின் அவர்களை காவல்துறையினர் கைது செய்து இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தேர்தல் பணி தீவிரமாகி வருகின்றது. அதனடிப்படையில், அதன் ஒருபகுதியாக கலைஞர் பிறந்த ஊரான திருக்குவளையில் திமுகவின் இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய பிரச்சாரத்தை ஆரம்பிப்பதற்காக திருவாரூர் போயிருந்தார். முதல் கட்டமாக கலைஞருடைய தாயாரின் சமாதிக்கு சென்று பிரார்த்தனை செய்த உதயநிதி திருக்குவளைக்கு விரைந்தார். அப்போது காவல்துறையினர் அவருக்கு கட்டுப்பாடுகள் விதித்து இருக்கின்றன.

இந்த நிலையில் அனுமதியின்றி திருக்குவளையில் கூட்டம் நடத்தியதாக உதயநிதி ஸ்டாலின் அவர்களை காவல்துறையினர் கைது செய்து மண்டபத்தில் தங்க வைத்திருக்கின்றன.. இதன் காரணமாக, அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகின்றது. கைது செய்தாலும் தொடர்ந்து பரப்புரையை நடத்துவோம் என்று உதயநிதி தெரிவித்திருக்கின்றார். தடை விதித்ததை மீறி கூட்டம் நடத்தினால், உதயநிதியை கைது செய்வதற்காக ஏற்கனவே அந்த பகுதிகளில் 10 டிஎஸ்பி 14 ஆய்வாளர்கள் உள்பட 500-க்கும் அதிகமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.