இளைஞர்கள் வாக்கை அள்ள உதயநிதி போட்ட பிளான்.. இனி விஜய்யின் பாட்ஷா பலிக்காது!!

0
172
Udayanidhi's plan to get the youth to vote.. Vijay's Badsha will not work anymore!!
Udayanidhi's plan to get the youth to vote.. Vijay's Badsha will not work anymore!!

DMK TVK: 2021 சட்டமன்ற தேர்தலில் விட்டதை பிடிக்க வேண்டுமென அதிமுகவும், 2026 தேர்தலிலும் ஆட்சியை தன் வசப்படுத்தியே வைக்க வேண்டுமென திமுகவும் முயற்சி செய்து வருகிறது. மேலும் புதிய கட்சியான தவெக முதல் முறை களமிறங்கும் தேர்தலிலேயே முதல்வர் பதவி வேண்டுமென்ற ஆசையில் உள்ளது. நாதக தனித்து போட்டியிட வேண்டுமென்ற முடிவில் இருந்து மாறவில்லை. இவ்வாறு அனைத்து கட்சிகளும் அவர்களது முடிவில் நிலையாக இருக்கும் சமயத்தில், திமுகவிற்கு மாற்று அதிமுக என இருந்த காலம் போய், தவெக- திமுக என விஜய் மாற்றியுள்ளார்.

இது அதிமுகவை மூன்றாவது இடத்திற்கும், திமுகவை அதிருப்திக்கும் உள்ளாக்கியுள்ளது. 75 ஆண்டு கால அரசியல் அனுபவம் உள்ள திமுகவை விஜய் நேரடியாக எதிர்ப்பது, வியப்படைய செய்தது. விஜய்க்கும், திமுகவின் துணை முதல்வர் உதயநிதிக்கும் உள்ள ஓர் ஒற்றுமை இளைர்கள் வாக்கு தான். விஜய் மிகப்பெரிய பிரபலம் என்பதால் அவருக்கு இயல்பாகவே இளைர் ரசிகர்கள் அதிகம். உதயநிதியும், இளைரணி தலைவராக இருந்ததால் அவர்களின் வாக்கை தன் வசப்படுத்தி வைத்துள்ளார். ஆனால் விஜய் அரசியலில் குதித்திலிருந்து, திமுக சேமித்து வைத்த இளைர்களின் வாக்கு குறைய தொடங்கியுள்ளது.

இதற்காக திமுக அரசு மக்களை சந்திக்கும் பணிகளை ஒதுக்கி வைத்து விட்டு, இளைர்களை கவரும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக, திருவண்ணாமலையில் நாளை மறுநாள், திமுக இளையராணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நடக்க இருக்கிறது. 13 லட்சம் இளைரணி நிர்வாகிகள் கூடும் இந்த நிகழ்ச்சியில், முதல்வர் சிறப்புரையாற்ற இருக்கிறார். இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க விஜய்க்கு கூடும் கூட்டத்தை முறியடிக்கும் விதமாகவே அமையும் என்றும், திமுகவுக்கு தான் இளைர்களின் வாக்கு என்பதை உறுதிப்படுத்தும் நோக்கிலும் அமையுமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

Previous articleசெங்கோட்டையன் வலையில் சிக்கிய அடுத்த அதிமுக அமைச்சர்.. தவெகவின் அடுத்த விக்கெட்!!