DMK TVK: புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்துக்கும், 70 வருடங்களுக்கு மேலாக ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்ற திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போட்டியில் தான் தற்போது தமிழக அரசியல் சுழன்று கொண்டிருக்கிறது. விஜய் கட்சி ஆரம்பித்த சில மாதங்களிலே தவெகவிற்க்கான ஆதரவு அதிகளவில் இருந்தது. தவெகவிற்கும் திமுகவின் துணை முதல்வர் உதயநிதிக்கும் உள்ள உள்ள ஒரு ஒற்றுமை இளைஞர்கள் ஆதரவு தான்.
திமுகவிற்கான இளைஞரணியின் பலம் உதயநிதியை நம்பி தான் இருக்கிறது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு உதயநிதி இளைஞர்களின் பலத்தை தன் வசம் வைத்துள்ளார். அதனை முறியடிக்கும் விதமாக உருவானது தான் தவெக. விஜய்க்கு மற்ற அனைத்து தரப்பினரின் ஆதரவை விட இளைஞர்களின் ஆதரவு தான் அதிகம். விஜயின் வருகையால், திமுகவின் இளைஞர்களின் ஆதரவு குறைந்துள்ளது என்று கணிக்கப்படுகிறது. அதற்க்கு முதன்மை காரணமாக பார்க்கப்படுவது, விஜய்யின் பிரச்சாரத்திற்கு கூடும் கூட்டத்தை உதயநிதி, பல இடங்களில் விமர்சித்தது தான்.
தவெகவில் உள்ள கூட்டம் கொள்கையற்ற கூட்டம் எனவும், வருடத்திற்கு ஒரு முறை நடத்தப்படும் கண்காட்சியை பார்க்க கூட தான் கூட்டம் கூடும் என்று கூறியுள்ளார். விஜய்யின் பிரச்சாரத்திற்கு இளைஞர்கள் கூட்டம் தான் அதிகளவில் கூடும். இதன் காரணமாக உதயநிதி கூறியது விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் இளைஞர்களை தான் என்பது தெளிவாகிறது. உதயநிதி விஜய்யின் ஆதரவாளர்களை மறைமுகமாக விமர்சிப்பதும், விஜய்யின் வருகையும் திமுகவின் இளைஞர்களின் ஆதரவை குறைத்துள்ளது என்று பலரும் கூறுகின்றனர்.

