DMK: சட்டமன்றத் தேர்தலையொட்டி ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என கட்சிகளனைத்தும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. அதிமுக மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பரப்புரையையும், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரிலும் பிரச்சாரத்தையும் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், திமுக சார்பில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பேசிய துணை முதல்வர் உதயநிதி வழக்கம் போல அதிமுக வஞ்சித்தார்.
அப்போது அதிமுகவை மிரட்டி அவர்களின் தோள் மீது ஏறி பாஜக சவாரி செய்து கொண்டிருக்கிறது. பாஜகவிற்கு பழைய அடிமைகள் போதாது என்று புதிய அடிமைகளையும் வலை வீசி தேடி வருகிறது. இந்தக் கொள்கையற்ற கூட்டத்தை சீர் செய்ய வேண்டியது திமுகவின் கடமை என்றும் கூறியிருந்தார். இவர் புது அடிமைகள் என்று கூறியது விஜய்யின் தவெகவை தான் என்று அப்பட்டமாக தெரிகிறது.
இவரின் இந்த கருத்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு முன் முதல்வர் ஸ்டாலினும் இதே போன்று விஜய்யை புதிய எதிரிகள் என்று கூறி மறைமுகமாக விமர்சித்திருந்தார். விஜய் முதல்வரை நேரடியாக விமர்சித்திருக்கும் போது, ஸ்டாலின் மட்டும் ஏன் அவ்வாறு செய்யவில்லை என்ற கேள்வியும் எழுந்தது. அப்போதே திமுக அரசையும், ஸ்டாலினையும் நெட்டிசன்கள் கிண்டலடித்து வந்தனர்.
விஜய்யை பற்றி நேரடியாக விமர்சிப்பதற்கு ஆளுங்கட்சிக்கு தைரியம் இல்லாததால் தான் மறைமுக தாக்குதல் நடத்துகிறது என்று பலரும் கூறி வந்தனர். தற்போது உதயநிதியும் விஜய்யை மறைமுகமாக விமர்சித்துள்ளதால், திமுகவிற்கு விஜய் மேல் உள்ள பயம் உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும், தவெக தொண்டர்கள் கூறி வருகின்றனர்.