தேசிய கொடியை அவமதித்த உதயநிதி! இது கூட தெரியாமலா துணை முதல்வர்
இன்று நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேசிய கொடியை அவமதித்ததாக விமர்சனம் எழுந்துள்ளது.
நாட்டின் 76 வது குடியரசு தினமான (ஜனவரி 26) இன்று அனைத்து இடங்களிலும் தேசிய கொடியை ஏற்றி சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சென்னை காமராஜர் சாலையில் உள்ள போர் நினைவு சின்னத்திலும் தேசியக்கொடி ஏற்றி குடியரசு தினமானது கொண்டாடப்பட்டது. ஆளுநர் ரவி அவர்களும் கலந்து கொண்டு கொடி ஏற்றி வைத்தார்.
இக்கொடியேற்ற நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளும், துணை முதலமைச்சர் உதயநிதி அவர்களும், அமைச்சர்களும்,சட்டமன்ற உறுப்பினர்களும், காவல்துறை அதிகாரிகளும், ஆயிரக்கணக்கான மக்களும் என அனைவரும் கலந்து கொண்டனர். கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்து முடிந்ததும் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் என அனைத்தும் நடைபெற்றது. அப்போது அங்கு நடைபெற்ற நிகழ்வுகள் மற்றும் மேடையில் அமர்ந்திருந்தவர்கள் அனைவரையும் புகைப்படம் எடுத்தனர்.
அந்த புகைப்படங்களில் துணை முதலமைச்சர் உதயநிதியின் புகைப்படமும் வெளியானது. அந்த புகைப்படத்தில் துணை முதலமைச்சர் நமது தேசியக்கொடியை வலது பக்கமாக அணிந்து இருப்பதை கண்டு பாஜக நிர்வாகி எஸ் ஜி சூர்யா ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.
X தள பதிவு லிங்க்:
https://x.com/SuryahSG/status/1883352440822509803
தமிழக துணை முதல்வர் உதயநிதி இந்திய தேசிய கொடியை சட்டையின் இடது புறத்தில் அணியாமல் வலது பக்கம் அணிந்து நம் பாரத நாட்டையே அவமதித்துள்ளார் என கூறியுள்ளார். மேலும் நம் நாட்டையும் அரசியலமைப்பு சட்டத்தையும் அவமதிப்பதையே திமுகவினர் நோக்கமாக கொண்டுள்ளனர் போல எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
நமது தேசிய கொடியை எவ்வாறு ஏற்ற வேண்டும் எனவும், நமது சட்டையில் எந்த பக்கம் அணிய வேண்டும் எனவும் ஒரு விதிமுறை உள்ளது. ஆனால் உதயநிதி இத்தகைய விதிமுறையை பற்றி ஒன்றும் அறியாமலே துணை முதல்வராக அமர்ந்திருக்கிறார். மேலும் உதயநிதியின் இடதுபுறம் தேசியக்கொடிக்கு பதிலாக திமுக வின் சின்னம் அவரது சட்டையில் வரையப்பட்டிருந்தது. நமது தேசியக் கொடியை அவமதித்ததற்கு நீங்கள் வெட்கப்பட வேண்டும் என எஸ் ஜி சூர்யா கூறியுள்ளார்.