துணை முதல்வர் பதவிக்கு இப்போவே துண்டு போட ஆரம்பிச்சாச்சு- உதயநிதி ஸ்டாலின் பேச்சு! 

Photo of author

By Sakthi

துணை முதல்வர் பதவிக்கு இப்போவே துண்டு போட ஆரம்பிச்சாச்சு- உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
தமிழகத்தின் துணை முதலமைசர் பதவிக்கு இப்பொழுதே துண்டு போடத் தெடங்கிவிட்டனர் என்றும் தான் துணை முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ளதாக பலரும் பேசி வருவதை குறித்தும் விளையாட்டுத்துறை அமைச்சரும் இளைஞர்நலன் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகின்றது. தற்பொழுது தமிழகத்தின் முதல்வராக மு.க ஸ்டாலின் அவர்கள் இருந்து வருகின்றார். இதற்கு முன்னர் மறைந்த மு.கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக இருந்தார். மு. கருணாநிதி அவர்கள் மறைந்த பிறகு முதலமைச்சர் யார், தலைவர் யார் என்ற குழப்பங்கள் எழுந்த நிலையில் முக.ஸ்டாலின் அவர்களை கட்சியின் தலைவராகவும் முதல்வராகவும் அமைச்சர்கள் ஒரு மனதாக தேர்ந்தெடுத்தனர்.
முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்று மக்கள் பணி செய்து வருகிறார். இந்நிலையில் சமீப நாட்களாக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களின் மகனும் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துணை முதல்வராக போகிறார் என்று தகவல்கள் பரவி வருகின்றது.
இந்த தகவலுக்கு திமுக கட்சியின் தரப்பில் அதிகாரப்பூர்வமாக எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும் சில திமுக கட்சியினர் இதை உண்மை என்று கூறி நம்பிக்கை வைத்து வருகின்றனர். மேலும் அமைச்சர்கள் பேசும் விதமும் அதை உறுதிபடுத்தும் விதமாகத் தான் இருக்கின்றது. சில நாட்களுக்கு முன்னர் நடந்த கல்வி விழா ஒன்றில் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் உதயநிதி ஸ்டாலின் அவர்களை துணை முதல்வர் போல சித்தரித்து பேசினார். இதையடுத்து இந்த தகவல் உண்மையானது போன்று அனைவரும் பேசி வரும் நிலையில் இதற்கு அமைச்சர் உதய்நிதி ஸ்டாலின் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.
துணை முதல்வராகும் தகவல் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் “நான் துணை முதல்வராகப் போகிறேன் என்று அனைவரும் கூறுகின்றனர். அந்த தகவல் முற்றிலும் பொய்யானது. அந்த தகவல் வெறும் வதந்தி. இந்த பொய்யான தகவல்களை நம்பி துணைமுதல்வர் பதவிக்கு இப்போவே பேருந்தில் துண்டை போட்டு சீட் பிடிப்பது போல ஒரு சிலர் சீட் பிடிக்க தொடங்கி விட்டனர்.
திமுக கட்சியில் பல அணிகள் இருக்கின்றது. இருப்பினும் திமுக கட்சியில் இளைஞர்கள் அணி தான் முதல் அணி ஆகும். மேலும் இளைஞரணி செயலாளர் பதவியே எனக்கு போதும். அதுவே நெஞ்சுக்கு நெருக்கமான ஒன்றாக இருக்கின்றது. துணை முதல்வர் பதவி எல்லாம் எனக்கு வேண்டாம்” என்று கூறியுள்ளார்.