UGC: பொங்கல் விடுமுறை நாட்களில் யுஜிசி – நெட் தேர்வு நடத்த முடிவு செய்து இருக்கிறது.
வருகின்ற 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் மத்திய அரசு தேர்வு முகமையில் இருந்து அறிக்கை ஒன்று வெளியானது. அதில், பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களில் பட்டய கணக்காளர்(CA)தேர்வு நடத்துவதற்கான அட்டவணை வெளியிட்டு இருந்தது. இதற்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்புகள் எழுந்து வந்து
குறிப்பாக மதுரை எம்.பி சு. வெங்கடேசன் மத்திய அரசு ஏன் பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களில் (CA) தேர்வு நடத்த திட்டமிட்டு இருக்கிறது. பொங்கல் பண்டிகை என்பது தமிழர் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விழா ஆகும். அந்த விழா நாட்களில் தேர்வு வைத்து தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக இருக்கிறது என வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும், CA தேர்வுக்கான மாற்று தேதியை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். அதன் பின்னர் தேர்வுக்கான மாற்றுத் தேதி மத்திய தேர்வு மையத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் பொங்கல் பண்டிகை அன்று தேர்வு நடத்த தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. அதில் “யுஜிசி – நெட்” தேர்வு அட்டவணையில் 30 பாடங்களுக்கான தேர்வை வரும் ஜனவரி மாதத்தில் 15, 16 ஆகிய தேதிகளில் அறிவித்து இருக்கிறது.
வருகின்ற 2025 ஆம் ஆண்டில் ஜனவரி 14,15,16 ஆகிய தேதிகளில் பொங்கல்,திருவள்ளுவர் தினம்,திருவள்ளுவர் தினம் அடுத்தடுத்து மூன்று நாட்களுக்கு என தொடர் விடுமுறை தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. விடுமுறை நாட்களில் தேர்வு நடைபெறுவதால் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாவார்கள் எனவே தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என வேண்டுகோள் வைத்து இருக்கிறார்.