என்ன ஆதார் அட்டையை அப்டேட் செய்ய வேண்டுமா! எதற்காக தெரியுமா?

Photo of author

By Sakthi

ஆதார் அடையாள அட்டை வைத்திருக்கும் பணியாளர்கள் எல்லோரும் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை பயோமெட்ரிக், பெயர், முகவரி, உள்ளிட்ட புள்ளிவிவரங்களை அப்டேட் செய்து கொள்ளுமாறு யுஐடிஏஐ தெரிவித்துள்ளது.

இந்திய குடிமக்களின் அத்தியாவசிய ஆவணங்களில் ஒன்றாக இருக்கிறது ஆதார் அடையாள அட்டை. வங்கி கணக்கு ஆரம்பிப்பது முதல் அரசின் எல்லா விதமான சேவைகளையும் பெற வேண்டும் என்றால் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு விட்டது.

இந்தியாவில் ஒவ்வொரு குடிமக்களும் பிரத்தியேகமாக வைத்திருக்கும் 12 இலக்க அடையாள எண்ணாக ஆதார் அறிமுகம் செய்யப்பட்டு 13 வருடங்கள் நிறைவு பெற்றுவிட்டது. இந்த நிலையில் தான் ஆதார் எண் வைத்திருக்கும் பயனர்கள் பயோமெட்ரிக், பெயர் முகவரி, உள்ளிட்ட புள்ளி விவரங்களை அப்டேட் செய்து கொள்ளுமாறு யூ ஐ டி ஏ ஐ தெரிவித்துள்ளது. அதேநேரம் 70 வயதிற்கு பிறகு பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்திருக்கிறது.

ஆதார் அட்டையை எதற்காக புதுப்பிக்க வேண்டும்?

நாட்டில் உள்ள அனைத்து பணிகளுக்கும் ஆதார் எண் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் சில சமயங்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. 12 இலக்கம் கொண்ட ஆதார் எண் இருந்தால் போதும் வங்கி குறைத்த விஷயங்கள் எங்கெல்லாம் ஆதாரை இணைத்துள்ளோமோ எல்லா விவரங்களையும் நாம் பெற முடியும்.

இந்த நிலையில் ஆதார் அடையாள அட்டை வந்த பிறகு அரசு நலத்திட்டங்கள் சான் கார்டு உள்ளிட்டவற்றில் இருக்கின்ற போலி பயனர்களுக்கு கண்டறியப்பட்டு அரசுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் சேமிப்பு கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் இருக்கின்ற மக்கள் எந்த விதமான தடுங்கலுமில்லாமல் ஆதார் எண்ணை பெற வேண்டும் என்பதற்காகவே சுமார் 50,000 ஆதார் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாடு முழுவதும் இருக்கின்ற 15 லட்சம் தபால் அலுவலகங்கள், ஒரு சில வங்கிகள் என்று எல்லாவற்றிலும் ஆதார் அட்டை சேவை வழங்கப்பட்டு வருகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் 90 சதவீத மக்கள் ஆதார் எண்ணை பெற்றுள்ள நிலையில், மேகாலயா, நாகாலாந்து மற்றும் லடாக் போன்ற பகுதியில் குறிப்பிட்ட சில சதவீதத்தினருக்கு மட்டும் இதுவரையில் ஆதார் எண் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகள் ஆதார்

5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் கைரேகை விவரங்களுடன் இருக்கும் பால் ஆதார் வழங்கப்படுகிறது.

அதன் பிறகு 5 வயது முதல் 15 வயது வரையில் ஒரு முறையும், 15 வயதிற்கு பிறகு ஒரு முறையும் ஆதார் பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பிக்க யூ ஐ டி ஏ ஐ அனுமதி வழங்கியுள்ளது.

குழந்தைகளைப் பொறுத்தவரையில் 2 முறை இலவசமாக ஆதார் பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பித்துக் கொள்ளலாம். அதே நேரம் விருப்பத்தின் பெயரில் மேற்கொள்ள வேண்டுமென்றால் 100 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

ஆதார் இல்லை என்றால் எந்த வேலையும் நடைபெறாது என்ற சூழ்நிலையில் நிச்சயமாக எல்லோரும் ஆதார் அடையாள அட்டையை புதுப்பிக்க மற்றும் அப்டேட் செய்ய வேண்டிய கட்டாயத்திலிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.