ஆதார் அட்டையில் மாற்றங்கள் செய்ய வேண்டுமா? இனி கவலையே வேண்டாம் வீடு தேடி வரும் ஆதார் சேவை!

Photo of author

By Sakthi

தற்சமயம் ஆதார் அட்டை பயனர்களுக்கு அவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் மாற்றுவதற்கான தேர்வை இந்திய தனிப்பட்ட அடையாள அமைப்பு வழங்குகிறது.

ஆனாலும் கைப்பேசி எண் இணைப்பு அல்லது பயோமெட்ரிக் விவரங்களில் மாற்றங்கள் உள்ளிட்டவற்றுக்கு பயனர்கள் அருகிலுள்ள ஆதார் சேவை மையத்திற்கு தான் செல்ல வேண்டும்.

இந்த சூழ்நிலையில்தான் ஆதார் அப்டேட் ப்ராசஸை எளிதாக மாற்ற அந்த அமைப்பு முடிவு செய்திருக்கிறது. அதாவது இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்கில் பணியாற்றும் சுமார் 48000 தபால்காரர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சிறப்புப் பயிற்சியை முடித்த பின்னர் ஆதார் அட்டையில் மாற்றங்கள் செய்ய விரும்பும் குடிமக்களின் வீட்டிற்கு சென்று வீட்டு வாசலில் ஆதார் அட்டை சர்வீஸ்களை பயிற்சிபெற்ற தபால்காரர்கள் வழங்குவார்கள் என்று தகவல் கிடைத்திருக்கிறது.

ஒட்டுமொத்தமாக 1.5 லட்சம் தபால்காரர்கள் தனித்தனியே பயிற்சி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஆதார் அட்டை உள்ளவர்கள் அதில் மாற்றங்களை செய்ய உதவுவதோடு இன்னும் ஆதார் திட்டத்தில் பதிவு செய்து அட்டையை வாங்காத தனிநபர்களுக்கும் புதிய ஆதார் அட்டைகளை ஏற்படுத்தவும் பயிற்சி பெற்ற தபால்காரர்கள் உதவி புரிவார்கள்.

ஊடக அறிக்கைகளின் அடிப்படையில் இந்த பணிகளில் ஈடுபட உள்ள தபால்காரர்கள் டிஜிட்டல் கெஜட்ஸ் டெஸ்க்டாப் அல்லது லேப்டாப் அடிப்படையிலான தகுந்த டிஜிட்டல் உபகரணங்களுடன் கூடிய ஆதார் உபகரணங்களைக் கொண்டிருப்பார்கள்.

ஆதார் அட்டை தாரர்களின் விவரங்களை அப்டேட் செய்வதற்கு மேலே குறிப்பிட்ட உபகரணங்களை தபால்காரர்கள் பயன்படுத்தலாம். அதேபோல சிறப்பு பயிற்சி பெறும் தபால்காரர்கள் குழந்தைகளும் ஆதார் அட்டைகளை பெறும் விதத்தில் ஆதார் எண் வழங்குவதற்காக குழந்தைகளை பதிவு செய்யும் பணியிலும், ஈடுபடுவார்கள் என்ற தகவல் கிடைத்திருக்கிறது.

நாட்டின் 755 மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் ஆதார் சேவை மையத்தை திறப்பதை இந்திய தனிப்பட்ட அடையாள அமைப்பு நோக்கமாக கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து தகவல் தெரிவித்திருக்கும் அரசின் மூத்த அதிகாரி ஒருவர் இதுவரையில் குழந்தைகளை ஆதாரில் இணைப்பதற்கு டேப்லட் மற்றும் கைபேசி அடிப்படையிலான கருவியைப் பயன்படுத்தி தபால்காரர்கள் சேவைகளை இயக்கி வருகிறோம்.

லேப்டாப் அல்லது டெஸ்க்டாப் ஐ பயன்படுத்தி தொலைதூர பகுதிகளில் ஆதார் விவரங்களை புதுப்பிக்கும் விதத்தில் தற்போது அதனை விரிவுபடுத்துவோம் என்றும் கூறியிருக்கிறார்.