அமைதிப் பேச்சு வார்த்தைக்கு முன்வாருங்கள்! உக்ரைன் அதிபர் மீண்டும் வலியுறுத்தல்!

Photo of author

By Sakthi

ரஷ்யா மற்றும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகளிடையே கடந்த 24ஆம் தேதி முதல் கடுமையான போர் நடைபெற்று வருகிறது.ரஷ்யாவின் இந்த அசுர தாக்குதலுக்கு ஆளாகி உக்ரைன் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது.

ஆனாலும்கூட உக்ரைன் ராணுவம் துவண்டு விடாமல் தொடர்ந்து அந்த நாட்டுடன் போர் புரிந்து வருகிறது.ரஷ்யாவின் இந்த கடுமையான தாக்குதலுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகின்றது ரஷ்யாவுக்கு இந்தப் போர் பல்லாயிரக்கணக்கான வீரர்களை பலியாக கொடுத்திருக்கிறது.

ரஷ்யா இந்த போரில் கிட்டத்தட்ட 2 லட்சம் வீரர்களை தலைமுறைக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது. அவர்களில் 15 ஆயிரம் பேர் வரையில் இந்த போரில் உயிரிழந்திருக்கிறார்கள் என்று உக்ரைன் அரசு தெரிவித்திருக்கிறது.இந்த சூழ்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்யாவிடம் போரை முடிவுக்கு கொண்டு வருமாறு மறுபடியும் வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

இது குறித்து நேற்று இரவு தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர் அமைதி பேச்சு வார்த்தையை தொடர வேண்டும் அதே நேரம் உக்ரைன் அமைதிக்காக தன்னுடைய எந்த ஒரு பகுதியையும் விட்டுக்கொடுக்க முன்வராது என்று உறுதிபட தெரிவித்திருக்கிறார்.