ஒரு முறை இந்த தீபம் ஏற்றி பாருங்கள்.. உங்கள் வீட்டில் உள்ள கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்துவிடும்..!!

Photo of author

By Priya

Umatha Kai deepam: ஒருசிலருக்கு அவர்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் சேமிப்பு என்பது இல்லாமலும், ஏதோ ஒரு வகையில் கடன் வாங்க வேண்டிய நிலையும் ஏற்படும். இந்த மாதம் எந்த தேவையும் இல்லை எப்படியாவது லாபத்தில் ஒரு பங்கு எடுத்து இதை வாங்க வாங்கிவிடலாம் அல்லது சேமித்து வைத்துவிடலாம் என அனைவரும் நினைப்பார்கள். ஆனால் எதிர்பாராத விதமாக ஏதோ ஒரு செலவு வந்துக்காெண்டு தான் இருக்கும். மேலும் கடன் வாங்கும் நிலையும் ஏற்படும்.

அது மட்டும் இல்லாமல் கணவன் மனைவி இடையே பிரச்சனை, வீட்டில் நிம்மதி இல்லாமல் ஏன் இவ்வாறு நடக்கிறது என்ற குழப்பம் எல்லாம் இருக்கும். ஒரு முறை இந்த ஊமத்தங்காயில் தீபம் ஏற்றி பாருங்கள் உங்கள் வீட்டில் கண்திருஷ்டி ஏற்பட்டிருந்தால் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சி (Umatha Kai deepam Etrum Murai) நிலைக்கும்.

ஊமத்தங்காய் தீபம் ஏற்றும் முறைகள்

ஊமத்தங்காய் அறிவியல் ரீதியாக பல மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. அதே போன்று இந்த காய் ஆன்மீக ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த ஊத்தங்காய் சிவபெருமானுக்கு உகந்த காயாக உள்ளது.

ஊமத்தங்காய் (Oomathankai deepam) கிராமப்புறங்களில் அதிகமாக கிடைக்கும். பெரும்பாலும் ஆற்றங்கரை ஓரங்ளில, குளங்கள், ஏரிகளின் கரைகளில் இந்த செடிகள் வளர்ந்திருக்கும். இதன் பூக்கள் வெள்ளை நிறத்தில் இருக்கும். காய் உருண்டையாக பந்து போன்று, முட்கள் போல் காட்சியளிக்கப்படும்.

இந்த காயை பறித்து வந்து அதன் காம்பை நீக்கி விட்டு, உள்ளே இருக்கும் விதைகளை நீக்க வேண்டும். பிறகு அதன் உள்ளே தீபம் ஏற்றும் எண்ணெய் அல்லது இலுப்பை எண்ணெய் கிடைத்தால் மிகவும் நல்லது. எண்ணெய் ஊற்றி திரி வைத்து அகல் விளக்கின் நடுவில் வைத்து பூஜை அறையில் தீபம் ஏற்றி வழிபடலாம்.

ஊமத்தை சிவபெருமானுக்கு உகந்ததாக பார்க்கப்படுவதால், அவரின் நாமங்களை கூறி வழிபடுவது நன்மை உண்டாகும்.

எந்த கிழமை தீபம் ஏற்றலாம்

தொடர்ந்து செவ்வாய் கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை நாட்களில் மாலை நேரத்தில் தீபம் ஏற்றி வழிபடலாம். இந்த காய் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். நீங்கள் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் இந்த தீபத்தை ஏற்றலாம்.

பலன்கள்

இவ்வாறு தொடர்ந்து தீபம் ஏற்றி வர நம் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் விலகி நேர்மறையான ஆற்றல் உண்டாகும்.

மேலும் எதிரிகள் தொல்லை நீங்கும். கடன் பிரச்சனை, கண் திருஷ்டி நீங்கும்.

வீட்டில் மனநிம்மதி கிடைக்கும். ஜஸ்வர்யம் பெருகும்.

மேலும் படிக்க: இறந்தவர்களின் படத்தை தவறுதலாக கூட இந்த திசையில் மாட்டி விடாதீர்கள்..!!