உக்ரைன் ரஷ்யா இடையில் நடைபெற்ற போர்!! இந்தியா செய்த செயலுக்கு பாராட்டு தெரிவித்த ஐ.நா சபை!!

0
206
UN praised India
UN praised India
உக்ரைன் ரஷ்யா இடையில் நடைபெற்ற போர்!! இந்தியா செய்த செயலுக்கு பாராட்டு தெரிவித்த ஐ.நா சபை!!
உலக நாடுகளான ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையில் கடந்த ஆண்டு போர்  நடைபெற்றது. அந்த  நிலையில் இந்தியா செய்த ஒரு செயலால் ஐக்கிய நாடுகள் சபை இந்தியாவை பாராட்டியுள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே கடந்த ஆண்டு போர் நடைபெற்றது. அந்த சமயம் அங்கு கடுமையான உணவு பற்றாக்குறை ஏற்பட்டது. அங்கு மட்டுமில்லாமல் கிட்டத்தட்ட 18 நாடுகள் உணவு பற்றாக்குறையை சந்தித்தது. இந்த நிலையில் உணவு பற்றாக்குறையை சந்தித்த 18 நாடுகளுக்கு திணை, கோதுமை வழங்கிய இந்தியாவின் செயலை ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச வேளாண் மேம்பாட்டு நிதியம் பாரட்டியுள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மற்றும் இரஷ்யா நாடுகளுக்கு இடையே போர் நடைபெற்ற பொழுது பல்வேறு நாடுகளில் கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது.
போர் காரணமாக உணவு பற்றாக்குறையை சந்தித்து வந்த 18 நாடுகளுக்கு தினை மற்றும் 18 லட்சம் டன் கோதுமை போன்ற தானியங்களை இந்தியா ஏற்றுமதி செய்தது. இந்த செயலை ஜி-20 விவசாய அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க இந்தியா வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச வேளான் மேம்பாட்டு நிதியத்தின் தலைவர் அல்வாரோ லாரியா அவர்கள் பாராட்டியுள்ளார்.
இது குறித்து அல்வாரோ லாரியா அவர்கள் “தினை வகைகளின் மறுமலர்ச்சியில் இந்தியா கவனம் செலுத்துவது மகிழ்ச்சியை அளிக்கின்றது. விவசாயிகளுக்கு தினை முக்கியமான விவசாயப் பயிர். தினை உலகின் ஏழ்மையான மற்றும் தொலைதூர பகுதிகளில் ஊட்டச்சத்தை உறுதிபடுத்துகின்றது.
உக்ரைன் போர் மனிதாபிமான நெருக்கடிக்கு வழி வகுத்தது. இந்த நேரத்தில் தினை, கோதுமை உள்ளிட தானியங்களை வழங்கி இந்தியா செய்த உதவி பாராட்டுக்குரியது. ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ள இந்தியா உலக நாடுகளின் உணவு முறைகளை மாற்றும் திறனை பெற்றுள்ளது” என்று கூறியுள்ளார்.
Previous articleஇந்த மருந்துகள் போலியானது!! ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!
Next articleநண்பன் படத்தை போல மருத்துவமனைக்குள் வண்டியில் சென்ற நபர்!! மகனின் சிகிச்சைக்காக தந்தை செய்த செயல்!!